இந்தியாகல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ஆசிரியர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்

advertisement by google

“ஆசிரியர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்” !!!.

advertisement by google

அரசுப் பேருந்துகள் எவ்வளவு காலதாமதமாக வந்தாலும் தொடர் வண்டி குறித்த நேரத்திற்கு வராமல் போனாலும் ஒரு முணுமுணுப்போடு கடந்து செல்கிறது பொது ஜனம் !!!.

advertisement by google

கிராமப்புற சுகாதார நிலையங்களில் அரசு மருத்துவர்கள் பணி நேரத்தில் வரவில்லை என்றாலும் மக்கள் கோபப்படுவதில்லை, அரசும் நடவடிக்கை பற்றி யோசிப்பதில்லை !!!.

advertisement by google

கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்று மனுவைப் பக்கத்தில் உள்ள பிள்ளையார் சிலை காலடியில் வைத்து விட்டுப் போன செய்தியும் படித்தோம் !!!.

advertisement by google

வங்கி அலுவலர் கவுன்டரை விட்டு எழுந்து போய் அரை மணி நேரம் கழித்தே வந்தாலும், அமைதியாக வாட்ஸ் அப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் !!!.

advertisement by google

ஆனால் ஆசிரியர் வரவில்லை என்ற காரணத்தினால் இது வரை ஒரு அரசுப் பள்ளி கூட பூட்டிக் கிடந்ததாக வரலாறு கிடையாது !!!.

advertisement by google

இருப்பினும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு நிமிடம் கூட தாமதமாக வந்து விடக் கூடாது என்பதில் பொது மக்களுக்கும் அரசுக்கும் அதிக அக்கறை இருக்கிறது !!!. அதனால் தான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமல் படுத்துவதில் அவ்வளவு ஆர்வம் !!!. மேலே குறிப்பிட்டுள்ளவர்களை விட ஆசிரியர்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் உள்ளார்கள் என்று புரிந்து பெருமை கொள்வோம் !!!. பயோ மெட்ரிக் வருகைப் பதிவை பயன்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் காலதாமதமாக வருவதில்லை என்று நிரூபிப்போம் !!!. ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்து விடுகிறார்கள் என்பதை மட்டும் அரசு உறுதி செய்து விட்டால் போதும், நாடு சுபிட்சம் அடைந்து விடும் !!!. விக்ரம் லேன்டரில் தொடர்பு கிடைத்து விடும் !!!. இந்தியப் பொருளாதாரம் தூக்கி நிறுத்தப்படும் !!!.

advertisement by google

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் லஞ்சம் வாங்கும் வாய்ப்புள்ளது !!!. பெற்றோர்களிடமும் மாணவர்களிடமும் இலட்சக்கணக்கில் கமிஷன் பெற வாய்ப்புள்ளது !!!. இந்தப் பணத்தை வைத்து அவர்கள் நிறைய சொத்து வாங்குவார்கள் !!!. எனவே ஆசிரியர்கள் மட்டும் அவசியம் தாங்கள் வாங்கிய சொத்துகளை பணிப் பதிவேடுகளில் பதிய வேண்டும். அவர்கள் ஹவுசிங் லோன் போட்டு வாழ்க்கை முழுவதும் டியு (DUE) செலுத்திக் கட்டும் ஒரே ஒரு வீட்டை கணக்கில் கொண்டு வந்து விட்டால் நாட்டில் உள்ள அத்தனை கருப்பு பணமும் ஒழிந்து விடும் !!!.

மடியில் கனம் இல்லை !!! வழியில் பயமுமில்லை நமக்கு !!!. இதையும் நமக்கு அளிக்கப்படும் வெகுமதியாக நினைத்து மகிழ்வோம் ஆசிரியர் நண்பர்களே !!!

நாடே அக்கறையுடன் உற்று நோக்கும் ஆசிரியர் இனத்தின் ஒரு அங்கத்தினர் என்ற பெருமையுடன்………….!!!

advertisement by google

Related Articles

Back to top button