இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

புதியதாககட்டப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலத்தில் நீண்டதூரம்விரிசல் அதிர்ச்சி

advertisement by google

புதிதாக கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் நீண்ட தூரம் விரிசல் ஏற்பட்டு சாலை உள்வாங்கி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி

advertisement by google

பட்டுசேலைகளுக்கும் கோவில்களுக்கும் உலக அளவில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக மற்றொரு ரயில் நிலையம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இரயில் நிலையம் வழியாக சென்னை டு அரக்கோணம் மார்க்கமாகவும் திருமால்பூர் டு செங்கல்பட்டு, சென்னை கடற்கரை மார்க்கமாகவும் காஞ்சிபுரம் முதல் பாண்டிச்சேரி மார்க்கமாகவும் தினந்தோறும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன . இந்த ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களால் அவ்வப்போது ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் தன்னார்வு தொண்டு அமைப்புகளும் கோரிக்கைகள் விடுத்து வந்தனர் . மக்கள் விடுத்திருந்த வேண்டுகோளின் படி கடந்த 2017 ஆம் ஆண்டு புதிய மேம்பாலம் கட்டும் பணியை தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். அதனையடுத்து மேம்பால கட்டுமான பணிகள் துரிதப்படுத்தப்பட்டு தற்போது 90 சதவீத கட்டுமானப் பணிகள் முடிந்து நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் சுமார் 750 மீட்டர் தூரம் சென்ட்ரிங் போட்டு அமைக்கப்பட்ட இந்த பாலத்தில் 300 அடி தூரம் தார்சாலை அமைத்துள்ளனர். அந்த தார் சாலை சுமார் 100 அடி தூரத்திற்கு இரண்டாக பிளந்து உள்வாங்கியுள்ளது . பணிகள் முடியும் தருவாயில் பாலத்தின் சாலைகள் நெடுக்க விரிசல் விட்டு பிளந்துள்ளதை கண்ட பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .பொன்னேரி கரை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து காஞ்சிபுரம் நகருக்கு வரும் வழியில் மேம்பாலம் ஏறும் முகப்பிலேயே இப்படி தார் சாலைகளில் விரிசல் ஏற்பட்டு சாலை உள்வாங்கி உள்ளதால் ரயில்வே நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுத்து இந்த சாலையை உடனே செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்தனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button