t

சென்னையில் யூரியா உரத்தை ,ஹெராயின் எனக்கூறி கத்தாரில் உள்ள நபருக்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது✍️ கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் நடவடிக்கை✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

சென்னையில் யூரியா உரத்தை ஹெராயின் எனக்கூறி கத்தாரில் உள்ள நபருக்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேர் கைது: கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் நடவடிக்கை*

advertisement by google

சென்னை: விவசாயத்திற்கு பயன்படுத்தும் யூரியா உரத்தை பொடியாக அரைத்து அதனுடன் போதை பொருள் கலந்து ஹெராயின் எனக்கூறி கத்தாரில் உள்ளவருக்கு விற்பனை செய்ய முயன்ற 4 பேரை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். சென்னையில் ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷன கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு ரகசிய தகவலின் படி மாதவரம் சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை கரும்பொழி பகுதியைச் சேர்ந்த முத்துராஜா(40), தனது நண்பர்களான அருண்குமார், தமீம் அன்சாரி, முகமது சபி ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வலைத்து பிடித்தனர்.

advertisement by google

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் பிடிப்பட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கத்தார் நாட்டை சேர்ந்த சையது என்பவருன் இந்த போதை பொருள் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேலும், 4 பேரிடம் இருந்து பரிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் தரம் குறித்து போலீசார் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சோதனையில் அது தரமான ஹெராயில் இல்லையேன்றும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் யூரியா என்ற உரத்தை பொடியாக்கி அதில் சில வேதிப்பொருட்கள் கலந்து போலி ஹெராயின் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

advertisement by google

அதைதொடர்ந்து பிடிபட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தனர். அதில், கடந்த 28ம் தேதி தமீம் அன்சாரி மற்றும் முகமது சபி ஆகியோர் கத்தாரி் உள்ள சையது என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களிடம் உயர் தரம் ஹெராயின் இருப்பதாக கூறி நம்பவைத்துள்ளனர். அதன்படி சையது சென்னை மண்ணடியில் உள்ள தனது நண்பரான நியாஸ் என்பவரை போதை பொருள் வாங்க அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது.

advertisement by google

அதைதொடர்ந்து யூரியா உரத்தை ஹெராயின் என்று விற்பனை செய்ய முயன்ற ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை கரும்பொழி பகுதியைச் சேர்ந்த முத்துராசா (40), தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (3)1, ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் தமீம் அன்சாரி (27), மதுரையைச் சேர்ந்த முகம்மது சபி (29) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த மோசடி பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button