இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

புளியம்பட்டி புனிதஅந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 350 போலீசார் – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தகவல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

புளியம்பட்டி அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 350 போலீசார் – மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தகவல்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல திருவிழாவை முன்னிட்டு 2 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல திருவிழா வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போன்று இந்த ஆண்டு கடந்த 28.01.2021 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத்திருவிழா வரும் 10.02.2021 வரை 14 நாட்கள் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் வந்து பிரார்த்தனை செய்து திருவிழாவில் பங்கேற்றுச் செல்கின்றனர்.

advertisement by google

திருவிழாவின் முக்கிய நாட்களான 07.02.2021 முதல் 10.02.2021 வரை நான்கு நாட்கள் அதிகமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆகவே இந்த இறுதி திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினருடன் ஆலோசனை நடத்தி, அறிவுரைகள் வழங்கினார்.

advertisement by google

இந்த திருவிழாவை முன்னிட்டு மணியாச்சி உட்கோட் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button