இலங்கை முல்லை தீவில் தோண்ட தோண்ட எலும்புக்கூடு?
முல்லைத்தீவில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடு……..
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த, முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள, மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில், நேற்று (12ம் தேதி) கட்டடம் கட்டக் குழிகள் தோண்டப்பட்டன
அங்கு கண்ணிவெடிகள் புதையுண்டு இருப்பது தெரியவந்தது
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபுணர்களின் உதவியுடன் கண்ணிவெடிகளை அகற்ற முயன்ற போது
அங்கு, மனித எலும்புக்கூடுகள் இருப்பது தெரியவந்தது
நுாற்றுக்காணக்கானவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் அப்பகுதி போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் அப்பகுதியில் புதையுண்டுள்ள மனித எலும்புகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
பணிகள் முழுமையான நிறைவடைந்த பின்னரே, எவ்வளவு எலும்புக்கூடுகள் புதையுண்டு உள்ளன என்ற விவரம் தெரியவரும்\’ என, போலீசார் தெரிவித்துள்ளனர்
இந்நிலையில், மனித எலும்புகள் காணப்பட்ட பகுதியில் ஆய்வு செய்த, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி லெனின்குமார், \’எலும்புக் கூடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, இறந்தவர்களின் காலத்தை கண்டறிய வேண்டியுள்ளது. இப்பணியில் வரலாறு மற்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும். ஆய்வு முடிவு வரும் வரை தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம்\’ எனத் தெரிவித்துள்ளார்.
திசை திருப்ப முயற்சி
மனித எலும்புகள் மீட்கப்பட்ட பகுதியில், மக்கிய நிலையில் பெண்களின் ஆடைகள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன
இதனால், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்களை கொன்று இங்கு புதைத்திருக்கலாம். இலங்கை அரசு இதை மூடிமறைக்கவோ, அல்லது பல நுாறு ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களின் எலும்புகள் தான் கிடைத்துள்ளன என, திசை திருப்பவோ முயற்சிக்க வாய்ப்புகள் உள்ளன
என, இலங்கைத் தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.