இந்தியா

உத்தரபிரதேச தேர்தலில் பாஜக கட்சியா அல்லது சமாஜ்வாதி கட்சியா? மாபெரும் போட்டி✍️பாஜகாவின் மாபெரும் கடுனையான சட்டங்கள் தண்டனைகள்✍️ மற்றும் இலவசங்கள் அறிவிப்பில் இருகட்சிகளிடையே மாபெரும் போட்டி ✍️தேர்தல் வாக்குறுதிகளில் என்ன வித்தியாசம்?விண்மீன்நியூஸ்?

advertisement by google

*உ.பி. தேர்தலில் பாஜக கட்சியா Vs சமாஜ்வாதி கட்சியா மாபெரும் போட்டி – பாஜகாவின் மாபெரும் கடுனையான சட்டங்கள் தண்டனைகள், மற்றும் இலவசங்கள் அறிவிப்பில் இருகட்சிகளிடையே மாபெரும் போட்டி – தேர்தல் வாக்குறுதிகளில் என்ன வித்தியாசம்?விண்மீன்நியூஸ்✍️

advertisement by google

உத்தர பிரதேசத்தில் 2022 தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், பாஜகவும், சமாஜ்வாதி கட்சியும் செவ்வாயன்று லக்னெளவில் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன..

advertisement by google

லக்னெளவில் உள்ள இந்திரா காந்தி அறக்கட்டளையில் கட்சியின் 12 பக்க தேர்தல் அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார், அதில் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை எட்டு பக்கங்களில் சுருக்கமாகக் கூற முயற்சித்தது.

advertisement by google

கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 212 அறிவிப்புகளில் 92 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.

advertisement by google

பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான பிறகே சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னரே தெரிவித்திருந்தார். அதன்படி பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே லக்னெளவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி சமாஜ்வாதி கட்சியின் தேர்தல்அறிக்கையை அவர் வெளியிட்டார்.

advertisement by google

87 பக்க அறிக்கையானது திட்டங்களின் நீண்ட பட்டியலை கொண்டுள்ளது மற்றும் அவற்றை விரிவாக விளக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முதலில் பாஜகவின் 2022 ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா’வின் ( மக்கள் நல வாக்குறுதி அறிக்கை)

advertisement by google

சில அம்சங்களையும், 2017 இல் அதன் வாக்குறுதிகள் என்ன என்பதையும் மதிப்பிட முயற்சிப்போம்.

advertisement by google

மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெற்றபோதும் கூட விவசாயிகளின் அதிருப்தியை சந்தித்து வரும் பா.ஜ.க, அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து விவசாயிகளுக்கும் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற முதல் மற்றும் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது.

‘விவசாயத்தை செழிக்கச் செய்வோம்’ என்று மொத்தம் 13 வாக்குறுதிகளை அக்கட்சி அளித்தாலும், மேற்கு உத்தரபிரதேசம் மற்றும் தராய் கரும்பு விவசாயிகளையும் கரும்பு கொள்முதல் மற்றும் பணம் அளித்தல் தொடர்பான சர்ச்சைகளையும் மனதில் வைத்து, 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதை உறுதி செய்வதாக இந்த முறையும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. இதைத்தான் 2017-லும் பாஜக கூறியது.

கூடவே, கரும்பு விவசாயிகளுக்கு காலதாமதமான கரும்பு கொள்முதலுக்கு சர்க்கரை ஆலைகளிடம் இருந்து வட்டி வசூலித்து வட்டியுடன் சேர்த்து வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்எஸ்பி) கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்வதை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும் பாஜக உறுதியளித்துள்ளது.

“பாஜக அரசு கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு விலையான 1 லட்சத்து 51 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது,” என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

இந்த புள்ளிவிவரம் எப்படி எட்டப்பட்டது என்ற குறிப்பை எந்த அரசு மூலத்திலிருந்தும் கண்டுபிடிக்கமுடியவில்லை, ஆனால் அவ்வப்போது, ‘பிரதான் மந்திரி கிருஷி சம்மான் நிதி’ போன்ற விவசாயிகள் தொடர்பான திட்டங்களின் பலன்கள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்குடன் இணைத்து கூறப்படுகின்றன.

இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் ‘பசுமாடு’ இல்லையா?

அடுத்த 5 ஆண்டுகளில் நந்த் பாபா மில்க் மிஷனின் கீழ் 1000 கோடி ரூபாய் செலவில் மாநிலம் பால் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக ஆக்கப்படும் என்று 2022 தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது. இதற்காக கிராமங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் தங்கள் பாலை கிராமத்திலேயே நியாயமான விலையில் விற்க வசதி செய்து தரப்படும்.

ஆனால் 2017ல் கால்நடைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்தது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் கறவை கால்நடைகளை சட்டவிரோதமாக கடத்துவதை மேற்கோள் காட்டி, உத்தரபிரதேசத்தில் பால் பண்ணை தொழில்கள் வளர்ச்சியடையவில்லை என்றும், “அனைத்து சட்டவிரோத இறைச்சி கூடங்கள் கண்டிப்பாக மூடப்படும் மற்றும் அனைத்து இயந்திர இறைச்சி கூடங்களும் தடை செய்யப்படும்” என்றும் 2017 அறிக்கை கூறியது.

யோகி அரசு 2020 இல் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தன் மூலம் பசு வதை தடுப்புச்சட்டத்தை மேலும் கடுமையாக்கியது. இப்போது பசுவதை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்று பிடிஐயை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தி கூறுகிறது.

இந்த நாட்களில் உத்தரபிரதேசத்தில் தெருவில் திரியும் கால்நடைகளின் பிரச்சனை மிகவும் பரவலாக உள்ளது. கோசாலை(பசுக்களை பாதுகாக்கும் இடம்) கட்டும் இயக்கம் நடைமுறையில் இருப்பினும்

கால்நடைகள் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. விவசாயிகள் இரவும் பகலும் வயல்களை காவல்காக்க வேண்டியுள்ளது.

பயிர் சேதத்தைத் தடுக்க, “கிராம பஞ்சாயத்து அளவில் கால்நடைகள் பாதுகாப்புக்கான திட்டத்தை உருவாக்குவோம்” என்று பாஜக தனது 2017 உறுதிமொழிப்பத்திரத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உத்தர பிரதேசத்தில் தெருவில் திரியும் கால்நடைகள் பிரச்னையை எதிர்க்கட்சிகளும் தேர்தல் பிரச்னையாக்கி வருகின்றன.

இப்பிரச்னையை அவ்வப்போது எழுப்பி வரும் சமாஜ்வாதி கட்சி, “தெருக்களில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. விபத்துகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. விவசாயிகளின் பயிர்களுக்கு பெரும் சேதத்தை அவைகள் ஏற்படுத்துகின்றன” என்று குற்றம் சாட்டுகிறது.

இந்த நாட்களில், உத்தர பிரதேசம் மற்றும் பிகாரில் இளைஞர்களின் கோபம் மற்றும் அரசு வேலைகளுக்கான தேர்வில் ‘வினாத்தாள்’ கசிவு விவகாரம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் மூன்று கோடிக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளையும் சுயவேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளதாக பாஜக கூறுகிறது.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஒரு வேலை அல்லது சுயவேலை வாய்ப்பை வழங்குவோம். இது தவிர, உத்தரபிரதேச அரசில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்,” என்றும் கட்சி உறுதியளித்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில், வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்பில் சாதனை அளவில் இளைஞர்களை இணைத்து அவர்களை தற்சார்பு அடையச்செய்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் ட்வீட் செய்துள்ளார்.

கடந்த நாலேமுக்கால் ஆண்டுகளில் 4.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளதாகவும் உத்தரபிரதேச அரசு கூறுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகள் வேலைவாய்ப்பு இல்லாததை இந்த தேர்தலில் பெரிய பிரச்சனையாக ஆக்கி வருகின்றன.

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த அறிக்கையைப் பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி, “உத்திரபிரதேச தேர்தலில் ’80-20′ என்று பேசுவது இளைஞர்களின் பிரச்சனைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வகையில் உள்ளது. உண்மை என்னவென்றால் பாஜக ஆட்சியில் 100 பேரில் 68 பேருக்கு வேலை இல்லை,” என்று தெரிவித்துள்ளார்.

ஐந்து ஆண்டுகளில் 70 லட்சம் வேலைகள் மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், உத்தரபிரதேசத்தில் அமைக்கப்படும் ஒவ்வொரு தொழில்பிரிவிலும் 90 சதவிகித வேலைகளை மாநில இளைஞர்களுக்கு ஒதுக்குவதாகவும் 2017 ஆம் ஆண்டில் பாஜக வாக்குறுதி அளித்தது.

இது தவிர, உத்தரப் பிரதேசத்தில் நாட்டின் மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் இன்குபேட்டரை அமைக்கப் போவதாகவும் 2017-ல் பாஜக கூறியிருந்தது. உத்தரப்பிரதேச அரசிடம் ஸ்டார்ட் அப் தொடர்பான கொள்கை உள்ளது. அது தொடர்பான திட்டங்களுக்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதைச் செயல்படுத்தியதன் மூலம் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

ஸ்டார்ட் அப் இயக்கம் உருவாக்கப்படும் என்று 2022 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் கட்சி உறுதியளித்துள்ளது. இது மதிப்பிடப்பட்ட 10 லட்சம் வேலைகள் மற்றும் சுய வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்ட் அப் தரவரிசையில் உத்தரப் பிரதேசத்தை முதலிடம் பெறச்செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஸ்கூட்டி, ஸ்மார்ட் போன், டேப்லெட் வியோகத்தில் போட்டி

உத்தர பிரதேசத்தில் பெண் குழந்தைகளுக்கு ஸ்கூட்டி கொடுப்பதில் தேர்தல் போட்டி நிலவுகிறது. இது முதன்முதலில் 2021 நவம்பரில் காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டது, மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்கூட்டிகளை கட்சி வழங்கும் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில், “கல்லூரியில் படிக்கும் திறமையான மாணவிகளை தன்னம்பிக்கை அடையச்செய்ய ராணி லக்ஷ்மி பாய் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும். மேலும் கட்சியின் சுவாமி விவேகானந்தா யுவ சசக்திகரன் யோஜனா திட்டத்தின் கீழ் 2 கோடி டேப்லெட்டுகள் அல்லது ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.” என்று கூறியுள்ளது.

மாநிலத்தில் கல்லூரியில் சேரும்போது அனைத்து இளைஞர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றும், கல்லூரியில் சேரும் அனைத்து இளைஞர்களுக்கும் மாதத்திற்கு ஒரு ஜிபி இலவச இணைய வசதி வழங்கப்படும் என்றும் பாஜக 2017 ஆம் ஆண்டில் வாக்குறுதி அளித்தது. இது தொடர்பான தரவுகளை நாங்கள் அறிய முயற்சித்தபோது, முதல்வர் யோகி ஆதித்யநாத் முதலிடம் பெற்றவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகளை விநியோகிப்பதாக சில பழைய அரசு ட்வீட்களில் காணப்படுகிறது.

இருப்பினும் 2021 டிசம்பரில் யோகி ஆதித்யநாத், லக்னெளவில் ஒரு கோடி டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட் போன்களை விநியோகிக்க ஒரு பெரிய திட்டத்தை தொடங்கினார்.

லவ் ஜிகாத் குற்றம் இழைத்தால்

“குறைந்தது பத்து ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்” என்பதை உறுதி செய்வதாக 2022 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்டுள்ளது.

தற்போது, ‘ உத்திரபிரதேச கட்டாய மதமாற்ற தடுப்புச் சட்டம் 2021’, சர்ச்சைக்குரிய ‘லவ் ஜிஹாத்’ வழக்குகளில் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் பல்வேறு வகையான குற்றங்களில் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை உள்ளது. ஆனால் இப்போது இந்த வழக்குகளில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குவது பற்றி யோகி அரசு பேசுகிறது.

உத்தரபிரதேச அரசு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, மதமாற்றத் தட்டுப்புச்சட்டத்தின் கீழ் 2021 ஜூலை வரை மாநிலத்தில் மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 50 வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏழு வழக்குகளில் வழக்குகளை மூடும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, 22 வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளதாக , 2021 அக்டோபரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது.

சமாஜ்வாதி கட்சி 87 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தாலும், “22 இன் 22 சங்கல்ப் பத்ரா” கட்சியின் முக்கிய திட்டங்களைப் பற்றிய ஒரு பார்வையை அளிக்கிறது.

விவசாயிகளுக்கு எல்லா பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, 15 நாட்களில் கரும்பு விவசாயிகளுக்குத் தொகை, 2025க்குள் எல்லா விவசாயிகளுக்கும் கடனில் இருந்து விடுதலை, இரண்டு ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு இரண்டு மூட்டை டிபி மற்றும் 5 மூட்டை யூரியா இலவசம், அனைவருக்கும் பாசனத்திற்கு இலவச மின்சாரம், வட்டியில்லா கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதியம் போன்ற பெரிய வாக்குறுதிகள் இதில் அடங்கும்.

கூடவே விவசாயிகள் இயக்கத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், இறந்த விவசாயிகளின் நினைவாக நினைவிடம் கட்டப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிபிஎல் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 2 எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் எஸ்பி உறுதியளித்துள்ளது. இதனுடன், இரு சக்கர வாகன உரிமையாளர்களுக்கு மாதம் ஒரு லிட்டர் இலவச பெட்ரோல், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 3 லிட்டர் பெட்ரோல் அல்லது 6 கிலோ சிஎன்ஜி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளது. வேலை வாய்ப்புக் கண்ணோட்டத்தில், MNREGA போன்ற நகர்ப்புற வேலை உறுதிச் சட்டத்தை உருவாக்குவது பற்றி கூறப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையில் 22 லட்சம் பேருக்கு வேலை வழங்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதாக சமாஜ்வாதி கட்சி உறுதியளித்துள்ளது. இதன் கீழ் 2005க்கு முன் ஊழியர்களுக்கு இருந்த ஓய்வூதிய முறையை அமல்படுத்தpபடும் என கூறப்பட்டுள்ளது. கட்சியின் மிக முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று சமாஜ்வாதி ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்குவதாகும். இதன் கீழ் 1 கோடி ஏழை குடும்பங்கள் பலன் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கேன்டீனில் 10 ரூபாய்க்கு உணவு வழங்குவது குறித்தும் உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், எல்லா காவல் நிலையங்களையும், தாலுகாக்களையும் ஊழலற்றதாக மாற்றுவோம் என்றும், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான திட்டமிட்ட வெறுப்புக் குற்றங்களை பொறுத்துக் கொள்ளாத கொள்கையைப் பின்பற்றுவோம் என்றும் அக்கட்சி கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மடிக்கணினிகளை விநியோகித்த முதல் அரசு சமாஜ்வாதி கட்சி அரசாகும். 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் அளிக்கப்படும் என்று 2022 ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில் கட்சி உறுதியளிக்கிறது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button