இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திடீர்பல்டி அடித்த அமித்ஷா

advertisement by google

advertisement by google

இந்தித்திணிப்பு தொடர்பான தனது பேச்சுக்கு பா.ஜ.க.வின் நலம் விரும்பி ரஜினியே கூட லைட்டாக எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று திடீர் யு டர்ன் அடித்த அமித் ஷா,’என் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’என்று விளக்கம் அளித்துள்ள நிலையில்

advertisement by google

அவரை விமர்சித்த எதிர்க்கட்சியினர் அனைவரையும் கடுமையான வார்த்திகளில் வம்பிழுத்திருக்கிறார் அரசியல் காமெடியர் எஸ்.வி.சேகர்.தனது ஒரே மொழி இந்தி பேச்சுக்கு இந்தியா முழுக்க, குறிப்பாக தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ‘நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை.நாட்டை ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி இருந்தால் நன்றாக இருக்கும் என்று பேசினேனே தவிர, இந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை. என் பேச்சை வைத்து அரசியல் செய்வோர் செய்யட்டும். இந்தியை இரண்டாவது மொழியாகக் கற்றால் நன்றாக இருக்கும் என்றுதான் பேசினேன். நான் என்ன தவறாகப்பேசினேன் என்பது புரியவில்லை’என்று கதறியிருந்தார்.அவர் அவ்வளவு பகிரங்கமாக விளக்கம் கொடுத்ததால் திமுக இன்று நடத்துவதாக இருந்த போராட்டத்தை கைவிட்டுள்ளது. அமித் ஷா மீது பாய்ந்தவர்கள் சற்று அமைதியடைந்திருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு இது சற்று பின்னடைவு என்று கருதப்பட்ட நிலையில் நடிகரும் அரசியல் காமெடியருமான எஸ்.வி.சேகர் சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,…முட்டாளுக்கு கூட புரியறமாதிரி இப்படி சொல்லிட்டா தமிழ் நாட்டுல அப்புறம் எப்படி அரசியல் செய்ய முடியும் ⁉️வெட்டி டிவி விவாதம் எப்படி செய்யறதாம்⁉️போராளிகளே போய் உங்க புள்ள குட்டிங்களை சிபிஎஸ்சில படிக்க வச்சு ஹிந்தி பேச வையுங்க. வால்க தமில்…என்று பதிவிட்டிருக்கிறார்.அடுத்த இன்னொரு பதிவில்,…ஹிந்தி எதிர்ப்புங்கிற பேர்ல எதிர்கால சந்ததியின் கல்வி, வேலை வாய்ப்பை கேள்விக்குறியாக மாற்ற நினைக்கும் தமிழக கட்சிகளின் மேல் அண்டை மாநில, வெளி நாட்டு தமிழர்கள் காறி துப்புவது உங்கள் முகத்திலேயே விழும் நாள் வெகு தொலைவில் இல்லை. உங்களுக்கென்ன துப்பினா துடைச்சுக்குவீங்க. அவ்வளவுதானே,…என்றும் பதிவிட்டிருக்கிறார்.\r\n\r\nஇந்தி, சமஸ்கிருதப் பண்டிதரான எஸ்.வி.சேகர் டமிலில் ரொம்பவே வீக் என்பதால் அவர் யாரை முட்டாள் என்கிறார் என்று புரிந்துகொண்டவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button