t

கர்நாடகாவில் இருந்து கடத்தப்பட்ட 3,408 மது பாட்டில்கள் பறிமுதல்✍️அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கர்நாடகா மதுபாட்டில்கள்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

இதுதான் சரக்கு லாரியோ..? கர்நாடகாவில் இருந்து கடத்தப்பட்ட 3,408 மது பாட்டில்கள் பறிமுதல்!

advertisement by google

கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, கள்ள சந்தையில் மது, புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

advertisement by google

இந்த நிலையில், கடந்த 2ம் தேதி அன்று இரவு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கர்நாடகாவில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் மஞ்சுளா மற்றும் அரும்பாக்கம் கே8 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

advertisement by google

அதனை தொடர்ந்து அன்று இரவு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நடுவாங்கரை மேம்பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு லாரி மற்றும் 3 கார்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

advertisement by google

சிறப்பு வகுப்பு… ஓய்வறையில் அத்துமீறல்… வாக்குமூலத்தில் வெளிப்பட்ட அசிங்கங்கள்

advertisement by google

அப்போது 1 லாரி மற்றும் 3 கார்களில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த நேபாளத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சோனுசிங் (39), என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 1 லாரி மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்து, வாகனத்தில் இருந்த 36 பெட்டிகளில் 1000 ML அளவு கொண்ட 324 மது பாட்டில்களும், 17 பெட்டிகளில் 750 ML அளவு கொண்ட 204 மது பாட்டில்களும், 60 பெட்டிகளில் 180 ML அளவுக் கொண்ட 2,880 மது பாட்டில்களும் என மொத்தம் 3,408 மது பாட்டில்கள் கைப்படறப்பட்டன.

advertisement by google

மேலும், தப்பியோடிய மற்றவர்களையும் பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி சோனுசிங் என்பவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button