இந்தியாதமிழகம்

தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு, தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு உருவாகியுள்ளது✍️தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பா✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

⭕?தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பா?

advertisement by google

⭕?மூன்றாவது அணிக்கான முயற்சிகள் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் தலை தூக்கத் தொடங்கியுள்ளது.

advertisement by google

⭕?தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகும் வாய்ப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு உருவாகியுள்ளது.

advertisement by google

⭕?தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திரும்பத் திரும்பக் கூறி வந்தனர். இது எல்லாம், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, 3-வது கூட்டணி அமைக்கும் முயற்சி அரசியல் களத்தில் தீவிரப்பட்டுள்ளது. குறிப்பாக, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சசிகலாவை சந்தித்ததும், அதன் உடன் நிகழ்வாக, திமுக சின்னத்தில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாரிவேந்தரின் மகனும், இந்திய ஜனநாயக கட்சித் தலைவருமான ரவிபச்சைமுத்து, சரத்குமாரை சந்தித்து கூட்டணி ஒப்பந்தம் போட்டுள்ளதையும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

advertisement by google

⭕?அதே போல், அதிமுக சின்னத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வான, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தனியரசு எம்.எல்.ஏ கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலாவை சந்தித்துள்ளார். இதனால், சசிகலாவை தலைமையாக கொண்டு, அமமுக, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியில் திரளுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும், புதிய தமிழகம் கட்சி அதிமுக சார்பு நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக பேசியதாக தெரியவில்லை. மேலும், கூட்டணி அரசு அமைய வேண்டும் என்று கிருஷ்ணசாமி தொடர்ந்து பேசி வருவதையும் கவனிக்க வேண்டியுள்ளது. தேமுதிகவுக்கும் இன்னும் பாதை தெளிவாகப் புலப்படவில்லை.

advertisement by google

⭕?ஒருபக்கம், முக்கிய அரசியல் தலைவர்களுடன் சசிகலா ஆலோசித்து வருவதையுயும், மூன்றாவது அணிக்காக கமல் ஹாசன் முயற்சி எடுப்பதும் தமிழக அரசியலில் மூன்றாவது அணிக்கான வியூகத்தை தீவிரப்படுத்தி உள்ளதையும் நமக்கு தெளிவாக காட்டுகிறது. இருப்பினும் மூன்றாவது அணி அமையுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

advertisement by google

⭕?திமுக மற்றும் அதிமுக கூட்டணியிலிருந்து தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டு காங்கிரஸ் மதிமுக தேமுதிக கொங்கு இளைஞர் பேரவை கம்யூ, வி.சி.க., போன்ற கட்சிகள் அக்கூட்டணியிலிருந்து வெளியே வந்தால் மூன்றாவது அணியில் இணைத்து மாபெரும் கூட்டணி அமைக்க கமல்ஹாசன் தயாராக காத்துக்கொண்டு இருக்கிறார்

advertisement by google

⭕?கமல்ஹாசனின் இந்த முயற்சி பலிக்குமா என்பது இன்னமும் 4,5 நாட்களில் தெரிந்து விடும்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button