உலக செய்திகள்

கியூபாவில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் என்பதே கிடையாது

advertisement by google

கியூபாவில் தனியார் பள்ளிகள் என்பதே கிடையாது. தனியார் கல்லூரிகளும் கிடையாது. 6 வயது முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வியை கியூபாவில் அறிமுகம் செய்தவர் பிடல் காஸ்ட்ரோ. அதே போன்று மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு ஏற்படாத வண்ணம் நாடு முழுக்கவும் ஒரே விதமான சீருடை மாணவர்களுக்கு வழக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 12 மாணவர்களுக்கு ஓராசிரியர் என்ற விகிதத்தின் அடிப்படையிலேயே மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

advertisement by google

99.8 சதவீதம் படிப்பறிவு.

advertisement by google

பிடல் காஸ்ட்ரோவின் கல்வி சார்ந்த நடவடிக்கையால் அங்கு கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம். 2010ல் யுனெஸ்கோ கணக்கின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் 99.8 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்கள். கியூபாவில் தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளை நடத்த அனுமதி கிடையாது என்ற நிலை உள்ளதால் தான் மக்கள் இந்த அளவிற்கு சிறந்த படிப்பாளிகளாக உருவாகியுள்ளனர்.

advertisement by google

தரமான இலவச மருத்துவமனைகள் கொள்ளை அடிக்கும் தனியார் பள்ளிகள் போன்றே தனியார் மருத்துவமனைகளும் கியூபாவில் இல்லை. உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு கியூபா என்று 2006ம் ஆண்டு பிபிசி அறிவித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இங்கு மகப்பேறின் போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கையும் மிக மிகக் குறைவு. அதே போன்று உலகிலேயே எச்ஐவி கிருமிகள் பாதித்த நோயாளிகள் குறைவாக உள்ள நாடும் கியூபா தான் என்கிறது புள்ளி விவரங்கள்.

advertisement by google

தொழில் நுட்பத் துறையில் கலக்கும் பெண்கள் கியூபாவில் உள்ள தொழில் நுட்பத் துறைகளில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு பணிபுரிவோரில் 70 சதவீதம் பேர் பெண்கள் தான். 30 சதவீதம் மட்டுமே ஆண்கள். மேலும், ஆண்களுக்கு அதிக ஊதியம். அதே வேலை செய்யும் பெண்களுக்கு குறைவான ஊதியம் என்ற ஏற்றத்தாழ்வுகள் கியூபாவில் இல்லை. ஆண்கள் என்ன தொகை சம்பளமாகப் பெறுகிறார்களோ அதே வேலையை செய்யும் பெண்களுக்கும் அதே சம்பளம் தான் வழங்கப்படும்.

advertisement by google

கியூபா நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் சொந்த வீட்டை சாத்தியமாக்கி கொடுத்தது பிடல் காஸ்ட்ரோவின் தலைமை. 2015ம் ஆண்டின் கணக்குப்படி கியூபாவில் 95 சதவீத பேர் சொந்த வீட்டின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். சொந்த வீடு இல்லாத கியூபா மக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அங்கு சமத்துவம் நிலை கொண்டிருந்தது. சொந்த வீடு வைத்திருக்கும் யாருக்கும் சொத்து வரி கிடையாது. அதே போன்று கடனுக்கு வீடு வாங்கி இருந்தால் வீட்டுக் கடனுக்கு வட்டியும் கிடையாது.

advertisement by google

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல
வேண்டும் ; இவர் போல யாரென்று ஊர்
சொல்ல வேண்டும் …………..

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button