இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திருச்சியில் அக்னி சிறகுகள்? (2021) முதல் நிகழ்ச்சி✍️சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி✍️ அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனர் டாக்டர்.இரா.மகேந்திரன் வரவேற்பு✍️ திருச்சிராப்பள்ளி தெற்கு மண்டல போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர் முருகேசன் சிறப்பு விருந்தினராகபங்கேற்பு✍️ முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

?அக்னி சிறகுகள்?

advertisement by google

இந்த ஆண்டின் (2021) முதல் நிகழ்ச்சி

advertisement by google

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

advertisement by google

அக்னி சிறகுகள் தொண்டு நிறுவனம் KING TV
ஆத்மா மனநல மருத்துவமனை குடி போதை மீட்பு மையம் திருச்சி மாநகர காவல்துறை அரியமங்கலம் இலட்சுமிபுரம் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் இணைந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை அரியமங்கலம் பகுதியில் நடத்தியது.
அக்னி சிறகுகள் தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர்.இரா.மகேந்திரன் வரவேற்றார் திருச்சிராப்பள்ளி தெற்கு மண்டல போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆணையர் முருகேசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்
சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல், அதிவேக பயணம், மது மற்றும் போதை பொருட்கள் உட்கொண்டு வாகனம் ஓட்டுதல், அலைபேசியில் பேசியபடி வாகனம் ஓட்டுதல் சாலை விதி மீறல்கள் ஆகும்.

advertisement by google

வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் நகருக்குள் குறிப்பிட்ட வேகத்துடன் செல்ல வேண்டும் சாலை வகுத்துள்ள விதிப்படி சாலைகளில் வாகனத்தை இயக்க வேண்டும்.
விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை அனைவரும் கடை பிடிப்போம். மாணவ சமுதாயத்தை சேர்ந்த நாமும் சாலை விதிமுறைகளை மற்றவர்களுக்கு எடுத்து கூறுவோம். இதுதொடர்பாக நடைபெறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கு பெறுவோம் என்றார்.
நிகழ்ச்சிக்கு அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திரு.சேரன் அவர்கள் முன்னிலை வகித்தார்
ஆத்மா மனநல மருத்துவமனை குடி போதை மீட்பு மைய மருத்துவர் ராஜாராம் மனநல ஆலோசகர்கள் கரண் லூயிஸ் பிரகதீஸ்வரன் உள்ளிட்டோர் குடிபோதையில் இருந்து விடுபட ஆலோசனைகள் வழங்கினார்கள் மன நல விழிப்புணர்வு குறித்து விளக்கினார்கள்.
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் கலீல் தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சேவை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேகரன் ரஜினி மக்கள் மன்ற இளைஞர் அணி தமிம் தகவல் தொழில் நுட்ப அணி பழனிவேல் கண்மலை அறக்கட்டளை எடிசன் இளங்கனல் டிரஸ்ட் அந்தோணி ஜெய்கர் மற்றும் இரஞ்சித் மாற்றம் அறக்கட்டளை சார்பாக திரு.R.A தாமஸ் நோ ஃபுட் வேஸ்ட் திருச்சி மோகன்அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் லட்சுமிபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் தலைவர் சேகர் செயலர் தஸ்தகீர் பொருளாளர் சர்தார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள் நிகழ்வில் சாலை விதிகள் குறித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டு பறை இசை பாடல் பாடப்பட்டது நிறைவாக அக்னி சிறகுகள் அமைப்பின் மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திருமதி.விமலா அவர்கள் நன்றி கூறினார்..

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button