தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

பூத்து குலுங்கும் மலர்கண்காட்சி நீலகிரியில்

advertisement by google

✍?✅நீலகிரி மாவட்டம் உதகையில் இரண்டாம் கட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா இரண்டாவது சீசனை துவக்கி வைத்தார்.

advertisement by google

உதகை இரண்டாம் சீசனையொட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் காண ஏதுவாக அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் மாடத்தில் பல வண்ண மலர்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
முதல் பருவ சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற நிலையில், மலர் காட்சியைக் காண முடியாதவர்கள், இரண்டாம் பருவ கால மலர் காட்சியை காண்கின்ற வகையில் நடைபெறும் இக்காட்சி ஒரு மாத காலம் வரை நடைபெறும் என்று மலர் காட்சிப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா கூறினார்.

advertisement by google

இந்த காட்சியில் டேலியா, சால்வியா, இன்கா மேரி கோல்டு, பிரஞ்சு மேரி கோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, ஆஸ்டர் உள்ளிட்ட 85 வகையான மலர்கள் 15 ஆயிரம் பூந்தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

advertisement by google

மேலும் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமார் 2 1/2 லட்ச மலர் செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்துக் குலுங்குவதும், பூங்காவின் பரந்த புல்தரை பச்சை கம்பளம் விரித்தார் போன்று காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button