இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

மீன் குஞ்சுகள் வளர்க்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்?தொடர்புக்கு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

?♈?மீன் குஞ்சுகள் வளர்க்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

advertisement by google

?தர்மபுரி: அரசு வழங்கும், 50 சதவீத மானிய திட்டத்தில், மீன் குஞ்சுகளை வளர்க்க விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

advertisement by google

?இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில், மீன் பண்ணைகளை பதிவு செய்துள்ள விவசாயிகள், மீன் குஞ்சுகள், மீன் தீவனம் உள்பட இடுபொருட்களுக்கு, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில், 50 சதவீதத்தில் உள்ளீட்டு மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெறலாம். இதில், மீன் வளர்ப்போர் மேம்பாட்ட முகமையில் பதிவு செய்து, மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப்பிக்கலாம். நன்னீர் மீன் வளர்ப்பு இடுபொருள் செலவினம் ஒரு ஹெக்டேர் மீன் வளர்ப்பற்கு ஆகும் மொத்த செலவினத்தொகை, 1.50 லட்சம் ரூபாயில், 50 சதவீதத்தில், 75 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். மீன் வளர்ப்போர் இந்திய பெருரக கெண்டை இனங்களான கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை, புல் கெண்டை ஆகிய மீன் இனங்களை, பிரதான இனமாக வளர்க்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள், ஒட்டப்பட்டி ராமசாமி கவுண்டர்தெருவில் உள்ள மீன்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை, 04342 – 232311 என்ற தொடர்பு கொண்டு, படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button