இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

எட்டயபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை‌ திறந்து வைத்த அமைச்சர் கடம்பூர் செ ராஜூ?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

எட்டயபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பாரதியார் இல்லத்தை‌ திறந்து வைத்த அமைச்சர் கடம்பூர் செ ராஜூ

advertisement by google

எட்டயபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் இல்லத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

advertisement by google

தூத்துக்குடி எட்டயபுரத்தில் பழமை மாறமல் புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் இல்ல திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட இல்லத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இந்நிழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

advertisement by google

பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-இந்திய திருநாட்டிலேயே நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட எண்ணற்ற தியாகிகள் வாழ்ந்த மண் தூத்துக்குடி மாவட்டம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு சுதந்திரத்திற்காக குரல் கொடுத்து வாழ்ந்து மறைந்த பாரதியார் பிறந்த மண் எட்டயபுரம் இந்தியாவிலேயே எட்டயபுரம் தனி சிறப்பு உண்டு அப்படிப்ட்ட புரட்சி கவிஞர்காக வாழ்ந்த புதுமை கவிஞர்காக வாழ்ந்த பாரதியார்க்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக புரட்சித்தலைவர் எம்.ஜீ.ஆர் முதலமைச்சராக இருந்த பொழுது அவரது நூற்றாண்டு விழாவை பார் போற்றும் வகையில் மூன்று தினங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜீ.ஆர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள்.

advertisement by google

இங்குள்ள மணிமண்டபத்தை புதுப்பித்தார்கள். மேலும் பாரதியார் பெயரில் தொழிற் நுட்ப கல்லூரியும் தொடங்கினார்கள்.மேலும் பாரதியார் நூற்பாலையும் தொடங்கி பெருமை சேர்த்தார்கள். அதை போலவே புரட்சித்தலைவி அம்மா மணிமண்டப பராமரிப்பு தேவையான அத்தனை பணிகளையும் மேற்கொண்டு முழுவுருவ சிலை அமைத்து ஆண்டுத்தோறும் டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த தினத்தை அரசு விழா கொண்டாடிட உத்தரவிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மகாகவி பாரதியார் வாழ்ந்த இந்த புனித இல்லத்தை பழழை மாறமல் புதுப்பிக்க ரூ.10 லட்சம் வழங்கி உத்தரவிட்டார்கள். இன்று புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் காணப்படுகிறது.

advertisement by google

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதை போலவே விளாத்திக்குளம் நல்லப்ப சுவாமி அவர்களுக்கு நினைவு தூண் அமைக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்தார்கள். மேலும் சீரப்புராணம் எழுதிய உமறுப்புலவர் அவர்களுக்கு ஆண்டுத்தோறும் அரசு விழா நடத்திட கோரிக்கை வைக்கப்பட்டு அரசு விழா கொண்டாடிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு பெருமை சேர்த்தார்கள். கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது உரியிழந்த 34 தியாகிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. நினைவு சின்னத்தை ஆண்டுத்தோறும் அரசு விழாவாக கோரிக்கை வைக்கப்பட்டள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசு விழாவாக நடத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

advertisement by google

தொடர்ந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் அண்மையில் உடல்நிலை குறைவால் மரணமடைந்த பாரதியார் ஆய்வாளர், எழுத்தாளர் இளசை மணியன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

advertisement by google

முன்னதாக கடலையூரில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது உரியிழந்த 34 தியாகிகளின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மறைந்த ஓட்டப்பிடாரம் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் வேலுச்சாமி இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா, எட்டயபுரம் தாசில்தார் அழகர், ‌கோவில்பட்டி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.சீனிவாசன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கங்கா, எட்டயபுரம் கூட்டுறவு சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிக்கவாகம், உமறுப்புலவர் சங்க தலைவர் காஜா முகைதீன், பாரதியார் இல்ல காப்பாளர் மகாதேவி முக்கிய பிரமுகர்கள் விஜயபாண்டியன், அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், தனஞ்ஜெயம், ஞானகுருசாமி, வண்டானம் கருப்பசாமி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button