இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

சாத்தான்குளம் அருகே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் தாய்க்கு நிதியுதவி ஆட்சியர் வழங்கினார்? மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் பரிந்துரை அடிப்படையில் முதலமைச்சர் உடனடியாக நிதியுதவி தொகை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்?முழுவிவரம்?விண்மீன்நியூஸ்

advertisement by google

சாத்தான்குளம் அருகே கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் தாய்க்கு நிதியுதவி – ஆட்சியர் வழங்கினார்

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருச்செந்தூர் வட்டம்
மெஞ்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்த கொலையுண்டு இறந்த சிறுமி முத்தாறு
என்பவரின் தாயார் உச்சிமாகாளி என்பவரிடம் வன்கொடுமை தடுப்பு
தீருதவி முதல் தவணை தொகையாக ரூ.4,12,500 க்கான
காசோலையினையும் இலவச வீட்டு மனை பட்டாக்கான உத்தரவினையும்
மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் இந்திராநகர்,
கல்விளை, மெஞ்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்த சேகர், உச்சிமாகாளி மகள் சிறுமி முத்தாறு என்பவர் கொலையுண்டு இறந்தார். அன்னாரது குடும்பத்தினருக்கு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வன்கொடுமை தடுப்பு தீருதவி வழங்கிட
அரசுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் ஆகியோர் பரிந்துரை
அடிப்படையில் முதலமைச்சர் உடனடியாக தீருதவித்
தொகை வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

advertisement by google

✍அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
திருச்செந்தூர் வட்டம் இந்திராநகர் கல்விளை மெஞ்ஞானபுரம் கிராமத்தை
சேர்ந்த கொலையுண்டு இறந்த சிறுமி முத்தாறு என்பவரின் தாயார் உச்சிமாகாளி என்பவரிடம் வன்கொடுமை தடுப்பு தீருதவி முதல் தவணை
தொகையாக ரூ.4,12,500-க்கான காசோலையினையும் இலவச வீட்டுமனை
பட்டாக்கான உத்தரவினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூர் இன்று (17.07.2020) வழங்கினார்.

advertisement by google

✍மேலும் தாயாரிடமும் உறவினர்களிடமும் ஆறுதல் தெரிவித்தார்.
குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
மாதந்தோறும் ஒய்வூதியமாக ரூ.5000- மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து
வழங்கப்படும் எனவும் பசுமை வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும்
எனவும் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்து ஆறுதல் கூறினார்.

advertisement by google

✍நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, திருச்செந்தூர் வட்டாச்சியர் ஞானராஜ் மற்றும்
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button