இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

213 காவலர்களுக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் – தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் தலைமை வகிப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

213 காவலர்களுக்கு பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் – எஸ்பி தலைமை

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை, அவரவர் பணியாற்றும் காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.

advertisement by google

✍தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்கள் கடந்த 30.06.2020 அன்றோடு 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்கள் பொது மாறுதலுக்கு (General Transfer) உள்ளானவர்கள். அவர்களில் இன்று முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம் மற்றும் கோவில்பட்டி உட்கோட்டங்களில் பணியாற்றும் 213 காவல்துறையினருக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் (Counselling for General Transfer) இன்று (18.07.2020) மாலை தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

advertisement by google

✍இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட காவல்துறையினர் ஏற்கனவே, அவர்கள் பணியாற்றிய காவல் நிலையம் மற்றும் சொந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் தவிர, அவர்கள் கேட்கும் காவல் நிலையங்கள் அவர்களின் விருப்பத்தின்பேரில் பொதுமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் நல்லமுறையிலும், பொதுமக்களிடம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவுரை வழங்கினார்.

advertisement by google

✍இந்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமாறுதலுக்கான காவல்துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button