இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் 101 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஒன்றியத்தில் தி.மு.க சார்பில் 101 இடங்களில் கண்டன ஆர்பாட்டம்.

advertisement by google

தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கொரோனா தொற்றினை கட்டுபடுத்த பொதுமக்கள் வெளியே வராமல் இருப்பதற்காக அனைத்து கடைகளையும் மாலை 5 மணிக்கு அடைக்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டது. ஆனால் தமிழக அரசால் இயக்கப்படுகின்ற டாஸ்மார்க் கடை மட்டும் இரவு 8 மணி வரை திறந்து இருக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் டாஸ்மார்க் கடையில் மதுபிரியர்கள் அதிகமாக கடையில் குவிகின்றனர் மேலும் இவர்கள் மது போதையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமலும் முக கவசமும் அணியாமல் சுற்றி திரிகின்றனர் இதனால் கொரோனா தொற்று பரவுகின்ற ஆபத்தான சூழ்நிலை உறுவாகியுள்ளது. எனவே ஊரடங்க கால கட்டத்தில் மற்ற கடைகளை மாலை 5 மணிக்கு மூடுவது போன்று டாஸ்மார்க் கடையினையும் மூட வேண்டும் என கேட்டு ஆனால் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகையால் இன்று தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட 101 இடங்களில் தோவாளை ஒன்றிய தி.மு.க சார்பில் சமூக இடைவெளி விட்டு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. தோவாளை ஒன்றியம் முழுவதும் தோவாளை ஒன்றியத் தி.மு.க சார்பில்101 இடங்களில் சமூக இடைவெளி விட்டு கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. ஆரல்வாய்மொழியில் 19 இடங்களில் நடைபெற்றது இதில் பேரூராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். ஆஸ்டின் எம்.எல்.ஏ, மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தி.மு.க செயலாளரும் எம்.எல்.ஏவுமான சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தினை தொடங்கிவைத்து பேசினார். மேலும் ஆரல்வாய்மொழியில் பேரூர் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதிகள் நாகராஜன், லாரன்ஸ், ஒன்றிய இலக்கிய அணி அமைப்பாளர் சேதுவேல் இது போல் ஆரல்வாய்மொழியில் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று பூதப்பாண்டியில் பேரூர் செயலாளர் ஆலிவர் தாஸ் தலைமையிலும் அதனுடன் சேர்த்து- 13 இடங்களிலும், அழகியபாண்டிபுரத்தில் ஜெயகுமார் தலைமையில் 9 இடத்திலும், தாழக்குடியில் பேரூர் அவைத் தலைவர் செல்வேந்திரன் தலைமையில் 7 இடங்களிலும், சகாய நகரில் முருகேசன் தலைமையில் 6 இடங்களிலும், தோவாளையில் ஊராட்சி தி.மு.க செயலாளர் கருணாநீதி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தாணு தலைமையில் 6 இடங்களிலும், செண்பகராமன்புதூரில் கல்யாணசுந்தரம் தலைமையில் 4- இடங்களிலும் மாதவலாயத்தில் ரகுமான் தலைமையில் 4 இடங்களிலும், திருப்பதிச்சாரத்தில் அய்யப்பன் தலைமையில் 3 இடங்களிலும், பீமநகரியில் இம்மானுவேல் தலைமையில் 2 இடங்களிலும்,இறச்சகுளத்தில் பெர்னார்டு தலைமையால் 4 இடங்களிலும், தடிக்காரகோணத்தில் பிராங்கிலின் தலைமையில் 5 இடத்திலும், காட்டுபுதூரில் ராஜேந்திரன் தலைமையில் 3 இடங்களிலும், திடல் பகுதியில் மூர்த்தி தலைமையில் 2 இடங்களிலும், கடுக்கரையில் சண்முகம் தலைமையில் 2 இடங்களிலும், ‍ ‍ தெள்ளாந்தியில் ஜார்ஜ் தலைமையில் 2 இடங்களிலும், ஞானத்தில் சதிஷ் தலைமையில் 3 இடங்களிலும், மற்றும் அருமநல்லூர் – 3 இடமும், தெரிசனங் கோப்பில் 1 இடத்திலும் ஈ.சாந்தி மங்கலத்தில் கோலப்பன் தலைமையில் 3 இடத்திலும் ஆக மொத்தம் தோவாளை ஒன்றியம் முழுவதும் 101 இடங்களில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button