இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

advertisement by google

கொரோனா ஊரடங்கால் டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள் கடந்த 4 மாதங்களாக டூரிஸ்ட் வேன்களை ஓட்ட முடியாமல் உள்ள நிலையில், காலாண்டு வரி கட்ட வேண்டிய நிபந்தனைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இன்சூரன்ஸ், எப்.சி, இ.எம்.ஐ. கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
தற்போது மீண்டும் கண்ட்ரோல் மீட்டர் மாட்டினால்தான் எப்.சி என்றும். வாகனத்தில் 7 பேர் மட்டும் அனுமதி என்றும் இ.பாஸ் பெற்றுத்தான் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி என்றும் கூறியதால் இ.பாஸ் அப்ளை பண்ணினால் அது கிடைக்க தாமதம் ஆகிறது.
அப்படியே இ.பாஸ் கிடைத்தாலும் பயணிகள் 7 பேருக்கு மேல் 3 நபர் இருந்தாலும் அவர்களை செக் போஸ்டில் இறக்கி விடுகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டுனர்களை மன உலைச்சலுக்கு ஆளாக்குவதால் வாகனங்களை இயக்காமல் சாலை வரி கட்ட முடியவில்லை என்றும் வாகனங்களை இயக்க அரசு அனுமதி தரவேண்டும் இல்லையென்றால் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிககைகளை வலியுறுத்தி கோவில்பட்டி சுற்று வட்டார வேன் உரிமையாளர்கள் சார்பில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் புரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button