பயனுள்ள தகவல்

கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கழிப்பறையை விட மிகவும் அசுத்தமான பொருட்கள் என்ன தெரியுமா?

advertisement by google

நாம் கழிவறைக்கு சென்று வந்ததும், உடனடியாகக் கிருமி நாசினியைக் கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவி விடுகிறோம். ஏனென்றால், கழிப்பறை சுத்தமாக இருக்காது, அங்கு பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும் என்ற பயம் நமக்குள் இருக்கிறது. ஆனால் கழிப்பறையை விட அசுத்தமானதும், அபாயகரமானதும் ஆன சில பொருட்கள் உள்ளன அவை என்ன என்பதைப் பற்றி இந்தப் பகுதியில் காணலாம்.

advertisement by google

என்ன வியப்பாக இருக்கிறதா?

advertisement by google

கழிவறையில் இருக்கும் பாக்டீரியாவானது 6 அடி வரை காற்றின் மூலம் பரவக்கூடியது. இது டூத் பிரஸில் இரண்டு மணிநேரம் வரை உயிர் வாழும் தன்மை கொண்டது.

advertisement by google

சமையலறையில் பயன்படுத்தும் கரித்துணி மற்றும் பாத்திரம் கழுவப் பயன்படுத்தும் ஸ்பான்ஞ்ச் போன்றவற்றில் 10 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இது 2,00,000 மடங்கு கழிவறையை விட அபாயகரமானதாகும். இது நமது ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கிறது.

advertisement by google

நாம் மாமிசத்தை நறுக்கப் பயன்படுத்தும் பலகையில் அபாயகரமான பாக்டீரியாக்கள் அதிகமாக வாழ்கின்றன. சராசரியான நறுக்கும் பலகையானது, கழிவறையை விட 200 மடங்கு ஆபத்தானது.

advertisement by google

தரை விரிப்புகளில் சதுர அடிக்கு 2,00,000 பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவை கழிப்பறையை விட 400 மடங்கு அபாயகரமானது. மற்றும் சுத்தமற்றதாகும்.

advertisement by google

ஐஸ் பற்றிய சில ஆய்வுகளின் மூலம், ஐஸ் அதிகளவு பாக்டீரியாக்களை கொண்டதாக உள்ளது. ஹோட்டல்களில் பரிமாறப்படும் ஐஸை விட ஹோட்டல் கழிப்பறை நீரே சுத்தமாக உள்ளதாம்.

பொதுக்கழிப்பறைகளின் தரைகளில் ஏராளமானோர் அசுத்தமான காலணியுடன் நடப்பதால், அவை மிக அசுத்தமானதாக உள்ளன. ஒரு சதுர அடிக்கு, 1.5 முதல் 2 மில்லியன் பாக்டீரியாக்கள் வாழ்கிறதாம். வீட்டுக் கழிப்பறைகளில் 50 பாக்டீரியாக்கள் தான் வாழ்கின்றதாம்.

ஹோட்டல்களில் வழங்கப்படும் மெனு கார்டுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பாக்டீரியாக்கள் உள்ளன. இது கழிப்பறையை விட 10 மடங்கு அதிகம்.

அதிர்ச்சியாக உள்ளதா? நீங்கள் நாளின் அதிகப்படியான நேரத்தை உங்களது அலுவலக மேஜையில் தான் கழிக்கிறீர்கள். ஒரு ஆய்வில் அலுவலக மேஜையில் கழிப்பறையை விட 400 மடங்கு அதிகமான பாக்டீரியாக்களும், வைரஸ்களும் இருக்கிறதாம்.

உங்களது செல்போன்களை தினமும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதில் கழிப்பறையை விட 10 மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நீங்கள் பேசும் போது உங்களது வாயில் இருந்து வருகின்றன. இவை தொற்றை உண்டாக்கும் தனமை உடையது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button