பயனுள்ள தகவல்மருத்துவம்

மனிதன் மட்டுமே முக அசைவுகளின் மூலமும் பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

மனிதன் மட்டுமே முக அசைவுகளின் மூலமும் பேச்சின் மூலமும்
பிறருடன் தொடர்பு
கொள்ள முடியும்.

advertisement by google

முகம்………

advertisement by google

மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும்.

advertisement by google

மனதைப் பிரதிபலிக்கும் கண்ணாடி ஆகும்.

advertisement by google

பயம்,

advertisement by google

கோபம்,

advertisement by google

துக்கம்,

advertisement by google

மகிழ்ச்சி

முதலான மனதின் உணர்வுகளை முகம் காட்டிக் கொடுக்கும்.

முகத்தின் அசைவுகள், உணர்வுகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும், வழி நடத்தும் பொறுப்பு தலையுடையது. தலை தான், மனித உடலின் மிக முக்கியமான உறுப்பாகும்.
மனிதன் மட்டுமே, முக அசைவுகளின் மூலமும், பேச்சின் மூலமும் பிறருடன் தொடர்பு கொள்ள முடியும். முக அசைவு மற்றும் பேச்சு இரண்டுமோ அல்லது இரண்டில் ஒன்று மட்டுமோ தடைப்படுவது முகவாதம் எனப்படும்.

முகவாதம் 80 வகையான வாத வியாதிகளுள் ஒன்றாகும்.
வாத தோஷத்தின் இயல்புநிலை மாறி விடுவதால் வரும் இவ்வியாதியால், உடலின் இயல்பான செயல்பாடுகள் குறைந்து, ஊனம் அடைய நேரலாம். இறப்பு கூட வரலாம். உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை வேறுபடுத்தும்
5 பொறிகளின் வேலை முடங்குகிறது. சூழலுடன் உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

ஐம்பொறிகளின் வெளிப்பாடுகள் நிகழக் காரணமாகத் திகழ்வது வாதம், இவற்றின் செயல்பாடுகளில் தடை ஏற்படுவதால் வாதம் இந்திரியங்களை பழுதாக்குவதாக கூடச் சொல்லப்படும். இந்நோய் எல்லா வயதினரையும் பாதிக்கிறது. இன்றைய சூழலில் குளிர்ந்த காற்று, குளிர்ந்த சூழ்நிலையில் அதிகம் இருப்போருக்கு அதிகம் இந்நோய் வருகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த ஒழிக்க இது தகுந்த தருணம் ஆகும்.

முகத்தின் இடது, வலது பக்கம் கோணலாகி விடுவது முகவாதம்.
அத்துடன் பாதிக்கப்பட்ட இடத்தில் அசைவு, உணர்ச்சி ஆகியன இயல்பு நிலை மாறி விடும். இந்நோய், முகத்தின் ஒரு பக்கத்தோடு சேர்ந்து உடலின் பகுதிகளிலும் பாதிப்பு வரலாம். அல்லது வராமலும் இருக்கலாம்.

தும்மலை அடக்குவதால் இந்நோய் வருகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

மேலும்……

அதிக நேரம் சத்தமாகப் பேசுவது,

கடினமான, உணவுப் பொருட்களை மெல்லுவது,

அதிகப்படியான சிரிப்பு,

தும்மல்,

கொட்டாவி,

தலையில் அதிக சுமை சுமத்தல்,

தலை மற்றும் கழுத்தை, திடீரெனத் திருப்புவது,

தூங்கும் போது சரியான நிலையில் தூங்காமை,

தலையணை அதிக உயரமாகவோ, குறைந்த உயரமாகவோ இருத்தல்

ஆகிய காரணங்களால் கூட நேரலாம். ரத்தசோகை ஏற்படும் போது இந்நோய் தாக்கும் அபாயம் உள்ளது.

மகளிர் கருவுறும் போதும்,

குழந்தை பிறப்புக்கு பின்னும் இந்நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

குழந்தைகள், வயதானவர்கள்,

உடல் மிகவும் மெலிந்து இருப்பவர்கள்

ஆகியோருக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

நோய் வருமுன் காணப்படும் அறிகுறிகள்

பார்வை மங்குதல்

தோலில் தொடு உணர்ச்சி குறைதல்

கழுத்தில் ஒருவித இறுக்கம்

தாடைகளில் இறுக்கம்

மயிர்க்கூச்செறிதல் ஆகிய அறிகுறிகள் தென்படும்.

நோய் அறிகுறிகள்.

முகம் சரியான கோணத்தில் இருந்து விலகி, ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளல்

தலை நடுக்கம்

பற்கள் நடுக்கம்

கண்களை சரியாக மூட முடியாமை.

மூக்கு கோணல்

பேசுவதில் சிரமம்

குரலில் கரகரப்பு

காது கேளாமை

காதில் வலி

வாசனையை நுகர முடியாமை

உணவை, மென்று விழுங்குவதில் சிரமம்

கழுத்து, கன்னம், பல் ஆகியவற்றில் கடும் வலி

மறதி, பேசும் போதும, சிரிக்கும் போது வாய் கோணல்

தூங்கும் போது ஒரு வித பயம் ஆகிய அறிகுறிகள் தென்படும். பெல்பால்சி எனப்படும் கடுமையான முகவாதம் முகத்தின நரம்புகளில் நீர் கோர்த்து, பலூன் போல் உப்புவதால் இந்நோய் ஏற்படுகிறது.

வழக்கமாக ஒரு பக்கம் மட்டும் வரும் இவ்வகை வாதம் சில சமயம் இரு பக்கமும் வரும்.

காதுக்குள், கன்னத்தில், காதுக்குப் பின்புறம் சைனஸ் இடத்தில் வலி இருக்கும்.

திடீரென உருவாகும்

முகத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் தசைகளில் வாதம் வரும்.

புருவத்தை உயர்த்த முடியாமை, இமைகள் மூடிக் கொள்ளல்.

கண்களை மூட முடியாமை

சாப்பிடும் போது புரையேறுதல்

கண்களை மூட முயலும் போது கண்களின் விழிக் கோளம், மேலும் கீழும் உருளும். இது பெல்ஸ் பினோமினம் எனப்படும்.

கண்களில் நீர் வடிந்து கொண்டே இருத்தல்.

காதின் நடுப்பகுதியில் ரத்த ஓட்டத்தில், பாதிப்பு ஏற்பட்டால் நாக்கில் சுவை உணர்வு குறைந்து விடும்

காதுகளில் இயல்பான சப்தத்துக்கு மாறாக, மிக அதிக தொனியில் இரைச்சல் கேட்கும்.

சில சமயம் காது கேளாமை கூட நேரும்.

நோய் வந்திருப்பவர் பலசாலியாக இருப்பின் நோய் விரைவில் குணமாகும். நோய் வந்தவுடன் சிகிச்சை தரப்படினும், நோய் விரைவில் குணமாகும்.

நோயாளி பலமில்லாதவராக இருப்பினும் கண்களை மூட முடியாமல் இருந்தாலும், பேச்சில் தடுமாற்றம் இருந்தாலும் நடுக்கம் இருந்தாலும், நோய் வந்து 3 வருடங்கள் ஆகியிருந்தாலும் வாய், கண்கள், மூக்கிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தாலும் அந்த நோயாளியை குணப்படுத்த முயற்சி செய்து பார்க்கலாம்.

உணவு முறை

வாதத்தை அதிகரிக்கும் உணவுகளான………

கொண்டைக் கடலை, நிலக்கடலை, கிழங்கு வகைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டுக் காய்கறிகளை உண்பது நல்லது.

தவிர்க்கும் வழிகள்

எளிதில் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது.

அதிக மன உளைச்சல், மன அழுத்தம் இவற்றைத் தவிர்ப்பது.

பயணத்தின் போதும் பிற சமயங்களிலும் அதிகக் குளிர்ச்சியான காற்று முகத்தில் படாமல் பாதுகாப்பது.

தொடர்ந்து ஏசி அறைகளில் இருப்பதைத் தவிர்ப்பது.

வாதத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தொடர்ந்து அதிகம் உண்ணாமல் இருப்பது ஆகியன இந்நோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் ஆகும்.

உடனிருப்போரின் பெரும் பங்கு.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்படும் தாழ்வுணர்ச்சி வந்து விடும்.

சமூகத்திலிருந்து விலகி இருக்க நினைப்பர், தனிமை மேலும் மன உலைச்சலை அதிகப்படுத்தும். இதனை உடனிருப்போர் உணர்ந்து நோயாளிக்கு ஆதரவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் தக்க முறையில் பேசி மன உளைச்சல் தவிர்க்கப்பட வேண்டும்.

உடல் அளவில் அவர்களது பாதிப்புக்கு உதவுவதற்கு மேலே அவர்களது மன பாதிப்பு நீக்கப் பாடுபடுவது
மிக முக்கிமானது. குறிப்பிட்ட இடைவெளியில் தவறாமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவது, மருந்து கொடுப்பதில் நேரம் தவறாமை, உணவு கொடுப்பதில் கவனம். வெளியே அழைத்துப் போவது, அதிக நேரம் அவர்களுக்காக செலவிடுவது என உடனிருப்போர் பங்கு அதிகமானது மிகவும் முக்கியமானது.

சிகிச்சை.

நோயின் பாதிப்புக்குத் தகுந்தபடி குணப்படுத்தும் காலமும் வேறுபடும்.

பாதிப்பு குறைவாக இருந்து உடனே சிகிச்சையை மேற்கொண்டால் நோய் சரியாகலாம். இந்நோயுடன் வேறுபாதிப்புகள் இல்லாமலிருந்தாலும் விரைவில் குணமாகலாம்.

பாதிப்பு அதிகமாக இருந்தாலோ சிகிச்சை தொடங்க தாமதம் ஆனாலோ கூட வேறு உடல் பாதிப்புகள் இருந்தாலோ முழுதும் குணமாக காலதாமதம் ஆகும்.

முழுவதும் குணமாகமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே வந்த பின் குணமடையச் சிரமம் மேற்கொள்வதை விட வராமல் பாதுகாப்பது சிறந்தது.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button