இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கொரோனா பணியில் முன் நின்று பணியாற்றிக் கொண்டு இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் !தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள்?முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

advertisement by google

14 – 06 – 2020

advertisement by google

அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும் கொரோனா பணியில் முன் நின்று பணியாற்றிக் கொண்டு இருக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் !

advertisement by google

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வேண்டுகோள் !

advertisement by google

வேகமாக பரவும் கொரனோவை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வரும் நிலையில், தமிழகத்திலும் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

advertisement by google

கொரனோ பரவலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதற்கும், நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் தொடர்ந்து தடை அமலில் உள்ளது.

advertisement by google

ஆனால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள், இதற்கு நேர் மாறாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமன்றி செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களும் அதிகம் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

advertisement by google

சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் மக்கள் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இது அவசியமான ஒன்று என்றாலும், அரசு நிகழ்ச்சிகளை கூடுதல் கட்டுப்பாட்டுடன் நடத்த வேண்டும்.

கடந்த 12 ம் தேதி மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சிக்காக சென்றிருந்த முதலமைச்சரின் புகைப்பட கலைஞருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க சென்ற சேலம், ஈரோடு செய்தியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் செய்தியாளர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் குறைந்த ஊதியத்தில் பெரும்பான்மை செய்தியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில் செய்தியாளர்களுக்கு கொரனோ தொற்று ஏற்பட்டால் அவர்களின் வாழ்வாதாரம் பாதித்து குடும்பம் நிர்கதியாகும்.
எனவே செய்தியாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்

அரசு நிகழ்ச்சிகளிலும், அமைச்சர் உள்ளிட்டோரை பேட்டி காணும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை பல மாவட்டங்களில் உள்ளது. இதை தவிர்த்து சமூக இடைவெளியை செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அப்படி முன்டியடித்துக் கொண்டு செய்திகளை வெளியிட்டு தொற்றை ஏற்படுத்திக் கொள்வது மட்டுமே மிச்சம்.

அதை தடுக்கும் வகையில் ஏற்பாடுகளை அரசு நிகழ்ச்சிகளில் செய்து தர வேண்டும் என அரசை டி.யூ.ஜே சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கொரனோ தொற்றால் பாதிக்கப்படும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கு உயரிய சிகிச்சை அளிப்பதுடன், கொரனோ தடுப்பு பணியில் உள்ள (Front line workers) அரசு பணியாளர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும் என்று மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கை வைக்கின்றன.

முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலேயே சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாமல் செய்தியாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்
மாநில தலைவர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )
9444111494

✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button