பயனுள்ள தகவல்மருத்துவம்

படுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா? தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது மட்டும்தான்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? படுக்கை அறையில் வெளிச்சமாக இருந்தால் ஏன் தூக்கம் வருவதில்லை தெரியுமா? தூக்கமின்மைக்கு நிரந்தர தீர்வு இது ஒன்றுதான்

advertisement by google

தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆயிரம் காரணங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், இந்த நவீன யுகத்தில் முதல் காரணம், விஞ்ஞான வளர்ச்சி என்று தான் கூற வேண்டும். ஆளாளுக்கு ஒரு மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு நோண்டிக் கொண்டே இருந்தால் எப்படிங்க தூக்கம் வரும்? ஒரு சிலருக்கு சிறிய வெளிச்சம் இருந்தாலும் தூக்கமே வராது. இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் உண்டு. இருட்டான அமைதியான சூழ்நிலை இருந்தாலே, பகலிலும் நமக்கு தூக்கம் எளிதாக வந்து விடுகிறது. ஆக இருட்டிற்கும், தூக்கத்திற்கும் என்ன தான் சம்மந்தம்? என்பதை தெரிந்துக் கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

advertisement by google

தூக்கம் வருவதற்கும், வராமல் இருப்பதற்கும் பல காரணங்கள் கூறப்படுகிறது. தூக்கம் வராமல் இருப்பதற்கு இருக்கும் காரணங்களில் பெரும்பாலும் வெளிச்சத்தை நீங்கள் நேரடியாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி மற்றும் கணினி, செல்போன் போன்றவைகள் அதிக நேரம் பயன்படுத்துவது தான் என்று கூறப்படுகிறது. நாங்கள் அதையெல்லாம் பயன்படுத்துவது இல்லை, தூங்க தான் செய்கிறோம். ஆனாலும் தூக்கம் மட்டும் வரமாட்டேன் என்கிறது அது ஏன்? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதிலாக அமைவது உளவியல் காரணங்கள் தான்.

advertisement by google

ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகளும், கவலைகளும் இருந்தால் நிச்சயம் தூக்கம் வருவது தடைப்படும். உதாரணத்திற்கு ஒருவருக்கு ஏகப்பட்ட கடன்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு இரவில் தூக்கம் வருமா என்ன? எப்படிடா அந்த கடனை அடைப்பது? என்கிற ஆழ்ந்த சிந்தனை அவர்களை தூங்க விடுவதில்லை. நீங்கள் அதைப் பற்றி யோசிப்பதால் கடன்கள் அடையாது என்பதை முதலில் உணர வேண்டும். அதற்கு பதிலாக உங்களுடைய உடல் நிலை தான் மோசமாகிக் கொண்டே இருக்கும். பிறகு எப்படி கடனை அடைப்பீர்கள்? நிம்மதியான உறக்கமே அடுத்த நாளைய உற்சாகத்தை நமக்கு உறுதி செய்து கொடுக்கிறது. உற்சாகமாக இருந்தால் தான் பணத்தையும் நம்மால் சம்பாதிக்க முடியும் என்பதை நினைவில் கொண்டு தூக்கத்திற்கு தயவுசெய்து முக்கியத்துவம் கொடுங்கள்.

advertisement by google

இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் அந்த அறையில் சிறிது வெளிச்சம் இருந்தால் கூட ஆழ்ந்த உறக்கம் என்பது எப்பொழுதும் வராது. உடலில் இருக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் தான் தூக்கத்தை வரவழைக்கிறது. வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இதனால் தூக்கம் வருவது தடைபடுகிறது. முழுவதும் இருட்டாக இருக்கும் பொழுது மெலட்டோனின் அதிகமாக சுரந்து இயல்பாகவே உங்களுக்கு தூக்கத்தை வரவழைத்து விடுகிறது. இதனால் தான் வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் நம்மால் தூங்க முடிவதில்லை. அப்படியும் சிலர் தூங்கினால் அதற்கு அவர்கள் உடலில் இருக்கும் சோர்வு தான் காரணமாக அமையும். அதுவும் ஆழ்ந்த உறக்கமாக இருப்பதில்லை. எனவே உங்கள் அறையில் வெளிச்சம் குறைவாக வைத்துக் கொண்டு தூங்கி பாருங்கள், நிச்சயமாக தூக்கம் வரும். இதை விட ஒரு சிறந்த வழி இருக்கிறது. அதைவிட தூக்கமின்மைக்கு எதுவுமே சிறந்ததாக இருக்க முடியாது என்று கூறலாம்.

advertisement by google

தூக்கமின்மைக்கு பல விஷயங்களை நாடி செல்வதில் ஒரு பயனும் கிடைக்கவில்லையா? இறுதியில் நாம் சிறு வயதில் அனுபவித்த ஒரு பாடத்தை செய்து பாருங்கள். சிறுவயதில் புத்தகத்தை எடுத்தால் நமக்கு தூக்கம் வந்துவிடும். எங்கிருந்து தான் அந்த தூக்கம் வரும் என்றே தெரியாது. இரண்டாவது பத்தி படிப்பதற்குள் நாம் தூங்கியே விடுவோம். இது யுத்தியை தான் தூக்கமின்மைக்கு கையாள வேண்டும். நல்ல புத்தகங்களை இரவு நேரத்தில் அமைதியாக அமர்ந்து படித்து பாருங்கள்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button