இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து கூறினார்.

advertisement by google

♻️தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பணிமாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்கள் விபரம் : புதுக்கோட்டை திரு. ஞானராஜ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை காவல் நிலையத்திற்கும், தூத்துக்குடி மது விலக்கு திரு. பழனிச்சாமி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குற்றப்பிரிவிற்கும், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு திரு. சிவசங்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு பிரிவிற்கும், கோவில்பட்டி கிழக்கு திரு. சுதேசன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கும், மாசார்பட்டி திரு. முத்துராமன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சிக்கும், கோவில்பட்டி மேற்கு திரு. அய்யப்பன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடிக்கும், விளாத்திக்குளம் அனைத்து மகளிர் திருமதி. நாகலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், கழுகுமலை திருமதி. கஸ்தூரி அவர்கள் வள்ளியூர் குற்றப்பிரிவிற்கும், தெர்மல்நகர் திருமதி. கோகிலா அவர்கள் சுத்தமல்லி குற்றப்பிரிவிற்கும், கோவில்பட்டி அனைத்து மகளிர் திருமதி. பத்மாவதி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நேசமணிநகருக்கும், தூத்துக்குடி அனைத்து மகளிர் திருமதி. வனிதா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், ஏரல் திருமதி. முத்துலெட்சுமி அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், குலசேகரப்பட்டினம் திருமதி. ராதிகா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், எட்டயாபுரம் திருமதி. கலா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு திருமதி. அன்னபூரணி அவர்கள் கன்னியாகுமரி மதுவிலக்குப்பிரிவிற்கும், தூத்துக்குடி மத்தியபாகம் திரு. ஜெயப்பிரகாஷ் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் திரு. கிங்ஸ்லி தேவ் ஆனந்த் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்திற்கும், மணியாச்சி திரு. பட்டாணி அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளைக்கும், கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு திருமதி. சுகாதேவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவிக்கும், ஆறுமுகநேரி திருமதி. செல்வி அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் உவரிக்கும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அனைத்து மகளிருக்கும், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு திருமதி. பிரேமா அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அனைத்து மகளிருக்கும், பசுவந்தனை திரு. பாஸ்கரன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் திரு.ஜோசப் ஜெட்சன் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரிக்கும், கோவில்பட்டி மதுவிலக்குப்பரிவு திரு. குமாரவேல் அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும், தூத்துக்குடி குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி. மீஹா அவர்கள் திருநெல்வேலி மாநகரத்திற்கும் ஆகிய 26 காவல் ஆய்வாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து பணிமாறுதலில் செல்கின்றனர்.

advertisement by google

♻️மேற்படி பணி மாறுதலில் செல்லும் காவல் ஆய்வாளர்களை இன்று (21.02.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அனைவரையும் நேரில் அழைத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த காலங்களில் சிறப்பான முறையில் பணியாற்றியுள்ளீர்கள், அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், நீங்கள் செல்லும் காவல் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றினால் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் வராமல் தடுக்க முடியும், ஆகவே நீங்கள் புதிதாக பொறுப்பேற்க உள்ள காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவியாக சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்துக்கூறி, அந்த காவல் ஆய்வாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்.

advertisement by google

♻️இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button