இந்தியாஇன்றைய சிந்தனைதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்வரி விளம்பரங்கள்

வீட்டின் உரிமையாளர்கள் மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வேண்டுகோள்? முழுவிவரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

வீட்டின் உரிமையாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வேண்டு கோள் !

advertisement by google

இது குறித்து ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில பொது செயலாளர் ஷாஜகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

advertisement by google

கரூர் மாவட்டம், மூக்கனாகுறிச்சி என்கிற கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் கட்டட தொழிலாளியான நாகராஜன் தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மணைவியுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது . மேலும் கடந்த ஒன்றரை மாதங்கள் வேலை இல்லாதனால் வீட்டின் வாடகை கொடுக்க முடியாத சூழலில் உள்ளனர் இதனால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தொடர்ந்து வற்புறுத்தல் காரணமாக நாகராஜன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் மற்றும் வீட்டு பொருட்களுடன் வீட்டை வீட்டு வெளியேறினார் .வீட்டு வாடகை கொடுக்க முடியாத தாள் வீட்டை விட்டு வெளியேற்ற பட்ட நாகராஜன் தனது மணைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தங்குவதற்கு வேறு இடம் இல்லாத காரணத்தால் வெள்ளியணை செல்லும் சாலை ஓரத்தில் தங்கினார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது . மேலும் கொஞ்சம் கூட ஈவ்வறக்கம் இல்லாமல் நடந்து கொண்ட வீட்டின் உரிமையாளரை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வன்மையாக கண்டிக்கிறது .

advertisement by google

கொரோனா தடுப்பு காரணமாக ஊரடங்கும் உத்தரவினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வருமானம் இல்லாமல் கடுமையான பொருளாதாரம் நெருக்கடியிலும் பெரும் அளவில் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு இருக்கும் இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூல் செய்வதும் வாடகை கொடுக்க முடியவில்லை ஏன்றால் வீட்டை காலி செய்யும் மாறு வற்புறுத்தல் செய்வது மனித நேய மற்ற செயலாகும் .

advertisement by google

ஊரடங்கும் உத்தரவுனால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகையினால் பாதிக்க பட்டு விட கூடாது என்கிற நல்ல என்னத்தோடு வீட்டின் உரிமையாளர்கள் இரண்டு மாதம் வாடகை வசூலிக்க கூடாது எனவும் மீறி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க படும் என மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஆனால் இதனை பொற்படுத்தாமல் வீட்டின் உரிமையாளர்கள் இன்று வரையிலும் வாடகை வசூல் செய்து வருகிறார்கள் . மேலும் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் சிறப்பு கவணம் செலுத்தி தகுந்த நடவடிக்கையை உடனடியாக மேற் கொள்ள வேண்டும் என தமிழக அரசை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது .

advertisement by google

எனவே : கட்டட தொழிலாளி நாக ராஜன் வசித்துள்ள அவ்வீட்டின் உரிமையாளர் மீது எந்தவித பாரபட்சம் பாராமல் சட்ட படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன ரீதியாக பாதிக்க பட்டுள்ள நாக ராஜனுக்கு அவ்வீட்டின் உரிமையாளர் ரூ 2 லட்சம் நஷ்டேடு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வீட்டின் உரிமையாளர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில பொது செயலாளர் ஷாஜகான் கூறியுள்ளார்.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button