தமிழ்நாடு மாவட்டம்

தமிழ்நாடு மாவட்டசெய்திகள்1.11.2019

advertisement by google

மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை

advertisement by google

திண்டுக்கல்: மகா புயல் அரபிக்கடலில் வடக்கு நோக்கி சென்றதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக மூடிய சுற்றுலா தலங்கள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டன.

advertisement by google

கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் லாரியில் பிளாஸ்டிக் கழிவை எடுத்து வந்து கொட்டிய 3 பேருக்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வனசூழலையும், உயிரினங்களையும் பாதிக்கும் வகையில் செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.

advertisement by google

சென்னையில் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆர்எம்ஓ திருநாவுக்கரசு கொடுத்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

advertisement by google

திருச்சி பெல் தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள வங்கியில் கொள்ளைபோனது பற்றி எஸ்.பி விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு ஓய்ந்த வழக்கு திருச்சியில் மீண்டும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

advertisement by google

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தவளை குளம் என்னும்  கிராமம் உள்ளது.
இக்கிராம மக்களின் விவசாய பயன் பாட்டிற்காக உள்ள  கண்மாய் பல ஆண்டுகளாக தூர் வாரி  பராமரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக கண்மாயில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதும் சேதமடைந்து இருந்த மறுகால் பாயும் மடையை உடைத்துக் கொண்டு தண்ணீர் சாலையிலும் விளை நிலங்களுக்கும் புகுந்தது.
இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். மீளவிட்டான்,சின்னகன்னுபுரம், வி.எம்.எஸ்.புரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்ற அவர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

advertisement by google

கிருஷ்ணகிரி
3பேர் குண்டர் சட்டத்தில் கைது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக கைது செய்யப்பட்ட அகர்நிவாஸ், அகில், ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட 3பேரை எஸ்.பி.பண்டி கங்காதர் பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிராபாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, காரில் வரும் மர்ம கும்பல் ஒன்று, ஆட்டுக் குட்டிகளை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இப்பகுதியில் ஆடு திருடு போகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
இந்நிலையில், இரவு நேரத்தில் காரில் வந்திறங்கும் மர்ம கும்பல் ஒன்று, வீட்டின் அருகே படுத்திருக்கும் ஆட்டுக்குட்டிகளை தூக்கி கடத்திச் செல்லும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன.
ஜெயபால் மற்றும் லட்சுமி ஆகியோருக்கு சொந்தமான 9 ஆடுகள் திருடு போயுள்ளதாக புகார். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நெல்லை தாமிரபரணி மகா புஷ்கர பூர்த்தி விழா நெல்லை தாமிரபரணி தைப்பூசபடித்துறையில் கால் நாட்டுடன் தொடங்கியது.
இன்று தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.முதல் நாள் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தாமிரபரணி நதியில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

இராமநாதபுரம்
சாயல்குடியில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை சுற்றிலும் தேங்கி நிற்கும் மழை நீர் மாணவிகளின் நலன் கருதி இன்று விடுமுறை அறிவிப்பு


⭐⭐⭐⭐⭐⭐⭐
தொகுப்பு
விண்மீன்நியூஸ் செய்திகதம்பம்
குழுமம்
⭐⭐⭐⭐⭐⭐⭐

advertisement by google

Related Articles

Back to top button