1967 நவ 1 தீபாவளி ரிலீஸுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னால் விவசாயி படத்தின் பிரிவ்யூ ஷோ எம்ஜிஆரிடம் போட்டுக் காண்பிக்கப்பட்டது.
அதைப் பார்த்த எம்ஜிஆர் படத்தின் ஓப்பனிங் சீன் சரியில்லை, ரீ ஷூட் பண்ண வேண்டியிருக்கும் என்று சொல்லி விட்டார். படத்தின் ஓப்பனிங் சீன் விவசாயி பாடல் தான். உடனே வசனகர்த்தாவை வரச் சொல்லி விவசாயியின் பெருமையைப் பாடலுக்கு முன்னாடி சேர்க்க வேண்டும், அதற்கு தகுந்தவாறு வசனத்தை எழுத வேண்டும் என்றார்.
பின்னர் அதை உடனே ரீ ஷுட் செய்து படத்தை குறிப்பிட்ட நாளிலேயே வெளியிட்டார்.
அப்படி அவர் சேர்க்கச் சொன்ன வசனம்
எம்ஜிஆருடைய தாயும் தகப்பனும் பேசிக் கொண்டிருக்கும் காட்சியில்
என்னங்க நம்ம பையனுக்குப் பொண்ணு பார்த்திட்டீங்களா என்றவுடன் அப்போது பார்த்து கல்யாண புரோக்கர் எம்ஜிஆரின் தகப்பனாரிடம் கைவசம் ஏகப்பட்ட இடம் இருப்பதாகக் கூறுவார். உடனே அவரும் யாரெல்லாம் சொல்லுங்கள் என்பார்.
புரோக்கரும் பண்ணையார் மகள், ஜமீன்தார் மகள் என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போவார். சரி எதையாவது ஒன்றை பேசி முடியும் என்பார்.
புரோக்கர் உடனே ஜமீன்தார் மகளுக்கு டாக்டர் மாப்பிள்ளை வேணுமாம், பண்ணையார் மகளுக்கு இன்ஜினியர் மாப்பிள்ளை வேணுமாம் என்பார்.
உடனே கோபமுற்ற எம்ஜிஆரின் தந்தை வெளியே போங்கையா என்பார்.எம்ஜிஆரின் தாய் நான் அன்றைக்கே சொன்னேன் பையனை நல்ல படிப்பு படிக்க வைங்கேன்னு சொன்னேன் நீங்க தான் விவசாயப் படிப்பை படிக்க வைச்சிட்டீங்க இப்ப பாருங்க பொண்ணு கிடைக்க மாட்டேங்குது என்பார். உடனே எம்ஜிஆருடைய அப்பா ஏண்டி இந்தப் படிப்புக்கு என்னடி அந்த ஜமீன்தார், பண்ணையார், ஏன் இந்த உலகத்துக்கே சோறு போடறவன் யாரு ,யாரு என்று உரக்கப் பேசியவுடன் எம்ஜிஆர் விவசாயி, விவசாயி எனப் பாடும் போது பறக்கும்
விசில் சத்தம் நடுவே பாட்டு உங்களுக்குக் கேட்டதா.
ஒரு சாதாரண காட்சியை சூப்பர் சீனாக மாற்றியது அவருடையை திரைக்கதை அறிவு.