தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

கோவில்பட்டியில் மின்சாரவாரியத்தின் கேங்மேன்பணிக்கான உடல்தகுதி தேர்வு பிரமிப்பு?

advertisement by google

கோவில்பட்டியில் மின்சார வாரிய கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்

advertisement by google

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கான உடற்தகுதி தேர்வு நவ.25-ம் தேதி முதல் டிச.10-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்துக்கான தேர்வு கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில், 2784 பேர் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

advertisement by google

தூத்துக்குடி அனல் மின் நலைய தலைமை பொறியாளர் பக்தவச்சலம், தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஞானேஸ்வரன், கோவில்பட்டி செயற் பொறியாளர் சகர்பான் மற்றும் கண்காணித்தனர்.

advertisement by google

இதில், முதல் தேர்வாக முறையாக கயிறு கட்டி, மின்கம்பம் ஏறி அதில் கால் மிதிப்பானை பொறுத்தி, அதில் நின்று கொண்டு 8 நிமிடங்களில் இரும்பு சட்டத்தை பொறுத்த வேண்டும். 2-வது தேர்வு 2 நிமிடங்களுக்குள் ஒரு டிஸ்கில் அதற்குரிய உபகரணங்களை பொருத்தலும், 3-வது தேர்வாக 31.5 கிலோ வி. கிரோஸ் இரும்பு சட்டத்தை தோளில் சுமந்தபடி ஒரு நிமிடத்தில் 100 மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.

advertisement by google

இதற்காக மின்வாரிய அலுவலகத்துக்குள் 10 மின்கம்பங்கள் நடப்பட்டிருந்தன. தேர்வர்களின் பாதுகாப்பு கருதி மின்கம்பங்களுக்கு கீழ் பகுதியில் வளையும், தேங்காய் நார் ஆகியவை விரிக்கப்பட்டிருந்தன. உடற்தகுதி தேர்வின் முதல் நாளான இன்று 9 பெண்களும் தேர்வில் பங்கேற்றனர். தினமும் காலை 8 மணி, மதியம் 1.30 மணி என இரண்டு பிரிவுகளாக தலா 100 பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஞானேஸ்வரன் தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button