பயனுள்ள தகவல்

நம்ம தமிழ்நாட்டுத் தங்கம் மக்காச்சோளம்?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

நம்ம தமிழ்நாட்டுத் தங்கம் மக்காச்சோளம்.

advertisement by google

நிறைய பேருக்கு தெரியாது நம்ம ஊரில் தெருவுக்கு தெரு, அரசுப் பள்ளி வாசல்களில் மளிவாக விற்கப்படும் மக்காசோளத்தில் அதிக ஊட்டச்சத்து இருக்குதுன்னு.. இதுவும் ஒருவகை காய்கறி மற்றும் தானிய வகையைச் சார்ந்தது.

advertisement by google

இதில்
ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்தும் விடுபட முடியும்.அதிக உடல் எடையைக் குறைக்கவும் சோளம் சாப்பிடலாம்.

advertisement by google

மஞ்சள் நிற சோளத்தில் ஒரு கப்பில் 392 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் வெள்ளை நிற சோளத்தில் 416 மில்லி கிராம் அளவு பொட்டாசியம் உள்ளது. இவை இரத்த அழுத்தத்தை (Blood pressure) சீராக வைத்திருக்க உதவுகிறது.அதிக அளவு பொட்டாசியம் அனைவருக்கும் குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு நல்லதல்ல. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவர் சொல்வதுபடி எடுத்துக் கொள்ளலாம்.

advertisement by google

அடுத்ததாக கோதுமை, அரிசியை விட ஆன்டி ஆக்ஸிடென்ட் சோளத்தில் அதிகமாக இருப்பதால் செல்கள் சேதமடையாமல் இருக்கவும், புற்றுநோய் மற்றும் இதயப் புற்றுநோயிலிருந்தும் பாதுகாக்கவும் உதவும். இதில் கரொடெனாய்டுகள், விட்டமின்-இ மற்றும் விட்டமின்-சி இருப்பதால் கண்களுக்கு மிகவும் சிறந்ததாகவும் சோளம் இருக்கிறது.

advertisement by google

அதிக சத்துக்கள் நிறைந்த நம்ம ஊரு சோளத்தில் இவ்வளவு சத்து இருக்கும் போது தேவையில்லாத மற்ற மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.

advertisement by google

மேலும், கவனிக்க வேண்டியது மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடும். எனவே அவற்றை வாங்காமல் தவிர்த்து நம்ம ஊரு மரபணு மாற்றம் செய்யப்படாத சோளத்தை வாங்கிச் சாப்பிடுவோம். ஆரோக்கியமாய் வாழ்வோம்!!

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button