இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விகிரைம்சிரிக்க சிந்திக்கதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திபயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் சீனா கடும் கண்டிப்பு?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கொரோனா குறித்த சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மட்டோம் என்று சீனா மிகவும் கண்டிப்புடன் குறிப்பிட்டு உள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது, எங்கே முதலில் தோன்றியது என்பது குறித்த சந்தேகங்கள் இப்போதும் நிலவி வருகிறது.

advertisement by google

இந்த வைரஸ் சீனாவில்தான் தோன்றியது என்று அமெரிக்கா உறுதியாக நம்புகிறது.

advertisement by google

அங்கு இருக்கும் வுஹன் வைராலஜி சோதனை மையத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்கலாம் என்று அமெரிக்கா நம்புகிறது.

advertisement by google

அதாவது வைரலாஜி சோதனை மையத்தில் உள்ள பி4 சோதனை கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்து இருக்க வாய்ப்புள்ளது.

advertisement by google

இதை பற்றி விரைவில் விசாரிப்போம் என்று அமெரிக்கா தெரிவிக்க தொடங்கி உள்ளது.

advertisement by google

50 நாடுகளில் 6,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு- 40 பேர் பலி-சிங்கப்பூரில் அதிகம்!

advertisement by google

கடும் விமர்சனம்அமெரிக்க அதிபர் டிரம்ப் இது தொடர்பாக தொடர்ந்து கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்.

சீனா கொரோனாவின் தோற்றம் குறித்து வேண்டும் என்றே மறைத்து இருந்தால் கடுமையான விமர்சனங்களை சந்திக்க நேரிடும். இது தொடர்பான உண்மைகளை விரைவில் வெளியே கொண்டு வருவோம் என்று டிரம்ப் கோபமாக பேசி வருகிறார்.

ஐரோப்பிய நாடுகளும் சீனா மீது கோபத்தில் உள்ளது.

என்ன திட்டமும்அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள்தான் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டது. சீனா மீது இதனால் கடுமையான நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு வருகிறது

இதற்காக சீனாவிற்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து ஐரோப்பா யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சீனா மறைத்ததுகொரோனா குறித்த அடிப்படை தகவல்களை சீனா மறைத்து உள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் தோற்றம் குறித்தும், அதன் தொடக்க கால பரவல் குறித்தும் விசாரிக்க வேண்டும். இதில் சீனா சில உண்மைகளை மறைத்து உள்ளது.

ரஷ்யாவும் இதில் சில முக்கியமான உண்மைகளை மறைத்து உள்ளது. சீனா தேவையில்லாமல் இதில் அமெரிக்கா மீதெல்லாம் பழியை போட்டது தவறு.முக்கிய கோரிக்கைஅதேபோல் கொரோனாவிற்கு எதிரான ஐரோப்பா யூனியனின் பணிகளை இவர்கள் விமர்சனம் செய்ததை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

சீன ஊடங்களுக்கும் இதில் தொடர்பு உள்ளது. இதனால் சீனாவை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து விசாரணை செய்ய வேண்டும். சர்வதேச அதிகாரிகள் சீனாவிற்குள் சென்று இதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று ஐரோப்பா யூனியன் கோரிக்கை வைத்துள்ளது.

ஆஸ்திரேலியா கோபம்அதேபோல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசான் இது தொடர்பான சீனாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அடுத்த மாதம் உலக சுகாதார கூட்டம் நடக்க உள்ளது. உலக சுகாதார மையத்தின் திட்டங்களை இந்த கூட்டத்தில்தான் வகுப்பார்கள். இதில் சீனாவிற்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம். இது தொடர்பான தீர்மானத்தை கொண்டு வருவோம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

சீனா மறுப்புஆனால் சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சீனாவின் வெளியுறவுத்துறை இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

சர்வதேச விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம். சர்வதேச விசாரணை அதிகாரிகளை நாங்கள் எங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம். இது அரசியல் ரீதியான நடவடிக்கை. நாம் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறோம்.அரசியல் காரணம்இப்போது அரசியல் ரீதியான பழி வாங்கும் நடவடிக்கைகளை செய்ய கூடாது. இல்லையென்றால் கொரோனாவிற்கு எதிரான நமது போராட்டத்தில் கவனம் சிதறிவிடும். இது தொடர்பாக ஏன் தேவையில்லாமல் விசாரணை செய்ய வேண்டும். அதற்கான அவசியம் எதுவும் இல்லை. மக்களை பொய்களை சொல்லி தவறாக வழி நடத்துவது மிகவும் ஆபத்தானது. கொரோனா வைரஸை விட அரசியல் வைரஸ் ஆபத்தானது என்று சீனா தெரிவித்துள்ளது

advertisement by google

Related Articles

Back to top button