கல்வி

பறவைகள் போல் மனிதர்களால் ஏன் பறக்க முடியவில்லை? ஒரு வானூர்தியை பறக்க வைத்த மனிதனுக்கு ஏன் மனிதனை பறக்க வைக்க முடியவில்லை?✍️ அறிவியல் அறிவோம்Q/A முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?

advertisement by google

மனிதனை விடுங்கள், பல பறவை இனங்கள் இன்னும் பறக்கமுடியாமல் தானே இருக்கின்றன? (மன்னித்து விடுங்கள் பென்குயின்களே).

advertisement by google

பறக்க வேண்டும் என்றால் தரையில் இருந்து எழுந்து, புவிஈர்ப்புவிசையை எதிர்த்து மேல் எழவேண்டும். அதே நிலையில் சற்று நேரமாவது நிற்க வேண்டும். (குதிப்பது பறப்பது இல்லை அல்லவா?).

advertisement by google

இதனை இயற்கையாகவே செய்ய பறவைகளால் முடிகிறது. அதற்கு காரணம்,

advertisement by google

அவற்றின் உடலமைப்பு. அவை காற்றியக்கவியல் (Aerodynamic) வடிவில், காற்றின் எதிர்விசையை குறைத்து, எளிதில் பறக்க உதவுகின்றன. மனித உடல் எந்த வடிவிலும் காற்றியக்கவியல் இல்லை.
பறவைகளின் உடல் இலகுவானது. மனித எடையை குறித்து நான் எதுவும் கூறவில்லை.
பறவைகளின் இறக்கைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. பறவைகளின் எடையை அதிக நேரம் தாங்கும் வலிமை மிக்கவை. மனிதனின் சக்தி அப்படி இல்லை. தன்னை தானே அதிகநேரம் தாங்கும் சக்தி மனித கைகளுக்கு இல்லை. எத்தனை தண்டால் எடுக்க முடியும் நம்மால்? Push Ups?
ஆக இயற்கையாகவோ அல்லது ஏதேனும் சிறிய மாற்றம் கொண்டோ மனிதனால் எந்நாளும் பறக்க முடியாது. மனிதன் பறக்க எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது தெளிவு.

advertisement by google

சரி மனிதனை பறக்க வைக்க என செய்யலாம் என பார்ப்போம். ஒரு மனிதன் 80கிலோ எடை இருந்தால் புவியில் இருந்து அவன் மேல் எழ 80*9.81 = 800 நியூட்டன் விசை தேவை.

advertisement by google

இதை தருவதற்கு என்னென்ன வழிகள் இருக்கின்றன?

advertisement by google

காற்றின் அடர்த்தி மாறுபாட்டின் படி இந்த மேல்நோக்கு விசையை உருவாக்கலாம். இது வழியே பலூன்கள் பறக்கின்றன.
நிலையான இறக்கைகள் கொண்டு, இந்த விசையை தரலாம். விமானங்கள் பறப்பது இதன் மூலம் தான்.
சுழலும் காற்றாடி கொண்டு இந்த விசையை தரலாம். ஹெலிகாப்டர் பறப்பது போல.
தாரை (ஜெட்) பொறி கொண்டு இந்த விசையை கொடுக்கலாம்.
இவற்றில் பலூன் வேகமே இராது, விமான வடிவு பெரிது. ஒரு மனிதனுக்கு அத்தனை பெரிது சாத்தியம் இல்லை. அவை Efficient இல்லை.

advertisement by google

தனி மனிதனை பறக்க வைக்க, காற்றாடிகள் அல்லது தாரை ஜெட் பயன்படுத்த வேண்டும். இது ஏற்கனவே பல சோதனை மாதிரிகள் வடிவில் இருக்கின்றன.

இவற்றில் உள்ள குறைகள்.

காற்றாடி ஒரு குறிப்பிட்ட அளவு காற்றை மட்டுமே கீழே தள்ள உதவும். பள்ளம் மேடு வந்தால் பறப்பவரின் நிலை கடினம் தான்.
பல காற்றாடிகள் சுழலும் போது, ஏதேனும் ஒன்று நின்றுவிட்டால் பறக்க முடியாது.
100 அடி பறப்பதற்குள் எரிபொருள் முடிந்து தரை இறங்க வேண்டும்.
தாரை பொறிகள் பயன்படுத்தும் போது, எரிபொருள் இன்னும் அதிக வேகமாக காலி ஆகும். பறக்கும் நேரம் குறைவு.
இரண்டிலும் மிக பெரிய சவால் அதனை கட்டுப்படுத்துவது மட்டுமே. தாரை பொறியின் சக்தி அதிகம். அதை கட்டுக்குள் வைக்கவே படாத பாடு படவேண்டும்.
இவை அதிகம் ஆராய்ச்சி நிலையில் இருப்பதற்கும், பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதற்கும் காரணம், இவை தேவையே இல்லை என்பது தான்.

மனிதன் பறக்க வேண்டும் என்றால் எனக்கு தெரிந்து இது வரை ஓரளவு சாத்தியமாகக்கூடிய மாதிரிகள்

  1. Flyboard Air
  2. Jetpack Aviation
  3. Hoversurf

படஉதவி மற்றும் உசாத்துணை

மனிதனால் பறக்க mudiyum

அதான் பேர் ககன margam

காற்றின் அளவை விட உடலை லேசாக செய்து பறக்கலாம்

மனிதர்கள் கிளைடரைக் கொண்டு வானில் நீண்டநேரம் பறக்கின்றனர். யார் சொன்னது பறக்கவில்லைஎன்று. ஹிமாசல் பிரதேஷ் சென்று பாருங்கள் எவ்வளவு பேர்கள் அந்த விளையாட்டில் ஈடுபடுகிறார்களென்று.நன்றி விண்மீன்TA விண்சென்ட்MScBEd

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button