உலக செய்திகள்

344 வயதான ஆமை உயிரிழந்தது

advertisement by google

நேரலை …..

advertisement by google

344 வயதான அலக்பா ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

advertisement by google

ஆப்பிரிக்கா: மிகவும் வயதான ஆமை இறந்தது… ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான அலக்பா எனும் ஆமை உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளது.

advertisement by google

தென்மேற்கு நைஜீரியாவின் ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து, அலக்பா எனும் இந்த பெண் ஆமை மிகவும் பாதுகாப்புடன் வளர்க்கப்பட்டு வந்தது. ஆமையை பார்த்துக்கொள்வதற்கு மட்டுமே இரண்டு வேலையாட்கள் நியமிக்கப்பட்டு பாதுகாத்துவந்தனர்.

advertisement by google

ஆப்பிரிக்காவிலேயே மிகவும் வயதான ஆமையாக கருதப்படும் 344 வயதான இந்த ஆமைக்கு நோய்களை குணப்படுத்தும் விசேஷ ஆற்றல் இருப்பதாக கருதப்பட்டதால், பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து ஆமையை பார்வையிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது

advertisement by google

இந்நிலையில் அலக்பா எனும் அந்த ஆமை உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது.

advertisement by google

அரண்மனை வட்டாரமும் ஆமை இறந்த தகவலினை உறுதி செய்துள்ளது. அதேநேரம், ஆமை 344 வயது வரை வாழ்ந்தது என கூறப்படுவதில் தனக்கு சந்தேகம் இருப்பதாக யோமி அக்பாடோ எனும் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button