சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா? எதிர்எதிரே சந்தித்த போர்க்கப்பல்கள்?13 லட்சம் சதுரமைல் சண்டை?முழுவிவரம் -விண்மீன்நியூஸ், விண்மீன் விண்சன்MScBEd
எதிர் எதிரே சந்தித்த போர்க்கப்பல்கள்…
13 லட்சம் சதுரமைல் சண்டை….
சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கா
தென் சீன கடல் பகுதியில் ஒரே நேரத்தில் மாறி மாறி சீனா மற்றும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் எதிர் எதிர் திசையில் செய்த பயிற்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லடாக்கில் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது
கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு சீனாவின் படைகள் வாபஸ் வாங்கி உள்ளது.
அங்கு தற்போது 4 கிமீ பகுதி மொத்தமாக இரண்டு பக்கமும்எனப்படும் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைக்கப்பட உள்ளது.
இங்கு தீவிரமாக இரண்டு தரப்பும் ரோந்து பணிகளை மேற்கொள்ளும்
லடாக் மீது ஒரு கண்.. இன்னொரு பக்கம் போர் ஒத்திகையை தொடங்கிய சீனா.. தென்சீன கடல் எல்லையில் பதற்றம்!
சீனாவிற்கு தொல்லைசீனா ஒரு பக்கம் லடாக் பகுதியில் அமைதியை ஏற்படுத்த தொடங்கினாலும், இன்னொரு பக்கம் தென் சீன கடல் எல்லையில் வசமாக சிக்கி இருக்கிறது.
அங்கு அமெரிக்காவிடம் சீனா வசமாக மாட்டி உள்ளது.
தென் சீன கடல் எல்லை என்பது வியட்நாம், சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பகிர்ந்து கொள்ளும் பெரிய கடல் பகுதி ஆகும்.
இந்த கடல் பகுதியை 90% சீனா தனது சொந்தம் கொண்டாடுகிறது.
ஆனால் உண்மைஆனால் உண்மையில் இந்த கடலில் பெரும் பகுதி மலேசியா, வியட்நாம் கீழே வருகிறது. இங்கே சீனா, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் எண்ணெய் எடுத்து வருகிறது.
இந்த கடல் பகுதியை மொத்தமாக கைப்பற்றினால் ஆசியாவில் கிங்காக மாறலாம் என்று சீனா நினைக்கிறது.
இந்த கடல் பகுதியில் 13 லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா உரிமை கொண்டாடுகிறது.
இதுதான் சண்டைக்கு காரணமா.
அமெரிக்கா படைகள்இங்குதான் தற்போது அமெரிக்கா தனது படைகளை அனுப்பி உள்ளது. தென் கடல் எல்லையில் இருக்கும் சர்வதேச கடல் பரப்புக்கு அமெரிக்கா படைகளை அனுப்பி உள்ளது.
இப்போது அல்ல கடந்த ஜனவரி இறுதியில் கொரோனா சண்டை இருந்தே போதே அமெரிக்கா இங்கே படைகளையே அனுப்பியது.
தற்போது யுஎஸ்எஸ் பிளிரிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்ற இரண்டு போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி உள்ளது.
போர் கப்பல்கள்இந்த இரண்டு போர் கப்பல்களும் அணு ஆயுத போர் கப்பல்கள் ஆகும். இதில் இரண்டிலும் தலா 12 போர் விமானங்கள் உட்பட 24 போர் விமானங்கள் , அணு ஆயுத ஏவுகணைகள், குட்டி குட்டி அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல்கள், அதிவேக போட்கள் எல்லாம் இருக்கும்.
இதற்கு உள்ளே பெரிய ஆயுத ஏவுகணைகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதற்கு எதிராக சீனா எதிர் திசையில் படைகளை குவித்து உள்ளது.
சீனா படைகள்இந்த நிலையில் சீனாவும் அங்கே போர் கப்பல்களை குவித்து உள்ளது. அதேபோல் சீனா தனது -21 மற்றும் -26 என்ற இரண்டு ஏவுகணைகளை திருப்பி உள்ளது. இந்த இரண்டையும் வேகமாக வேகமாக கடல் எல்லைக்கு சீனா கொண்டு வந்துள்ளது
இது போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகும். அமெரிக்காவின் போர் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சீனா இப்படி ஏவுகணைகளை அனுப்பி உள்ளது.
சண்டை ஏன்இந்த சண்டை எல்லாம் 13 லட்சம் மைல் பரப்புக்கு நடக்கும் சண்டை ஆகும். இங்கே தற்போது இரண்டு நாடுகளும் ஒரே நேரத்தில் போர் பயிற்சி செய்ததுதான் இந்த சண்டை தீவிரம் அடைய காரணம் ஆகும்.
ஆம் நேற்று மாலை இரண்டு நாட்டு ராணுவமும் எல்லைக்கு மிக அருகே போர் பயிற்சிகளை மேற்கொண்டது. ஒரு பக்கம் சீனாவின் போர் கப்பல்கள் போர் பயிற்சியை செய்தது. அதற்கு அருகிலேயே அமெரிக்காவின் போர் கப்பல்களும் பயிற்சியை மேற்கொண்டது.நிலைமை மோசம்அதிலும் சீனா பார்சேல் என்ற தீவில் அதிக அளவில் போர் கப்பல்களை குவித்து பயிற்சி செய்தது. அந்த இடத்திற்கு மிக அருகே 12க்கும் அதிகமான போர் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி பயிற்சி மேற்கொண்டது. தென் சீனா கடல் எல்லையில் இதனால் போருக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளது
அமெரிக்காவிற்கு ஆதரவாக அங்கே ஆஸ்திரேலியாவின் போர் கப்பல்களும் உள்ளது.சுற்றி வளைத்ததுஅமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் தென் சீன கடல் எல்லையை தற்போது சுற்றி வளைத்து உள்ளது என்று கூறுகிறார்கள்.
மூன்று முக்கிய எல்லையிலும் சீனாவின் போர் கப்பல்கள், விமானங்கள் இருக்கிறது. இதை தாண்டி சீனாவால் வெளியே செல்ல முடியாது என்று கூறுகிறார்கள்.
சீனாவை மொத்தமாக அமெரிக்காவின் போர் சுற்றி விட்டது, இனி சீனா பேச்சுவார்த்தைக்கு இறங்கி வர வேண்டும் என்று உலக அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்