இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டிபாஜக கட்சி நகரம் சார்பில் நகராட்சி ஆனையாளரிடம் மனு அளிப்பு ?

advertisement by google

பாரதிய ஜனதா கட்சி கோவில்பட்டி நகர சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி கோவில்பட்டி நகர சார்பில் நகராட்சி ஆணையாளர் ராஜாராம் அவர்களிடம் நகரத்தலைவர் M. பாலசுப்பிரமணியன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. மனுவில் கோவில்பட்டி நகராட்சியில் பிரிண்டிங் ஸ்டேஷனரி வாங்கும் பொருட்களில் சுமார் 30 லட்சம் ஊழல் நடந்திருப்பதாக அறிகிறோம். பிரிண்டிங் டோனர் தற்போது மார்க்கெட் விலையில் ரூபாய் 3,499க்கு அதிகபட்ச விலை தற்போது கோவில்பட்டி நகராட்சியில் ரூபாய் 6,088க்கு வாங்கியதாகவும் மற்றும் ஒரு குயர் நோட் ரூபாய் 350 க்கு வாங்கியதாகவும் மற்றும் பல பொருட்கள் அதிக விலையில் வாங்கியதாகவும், இது சம்பந்தமாக விலைப்புள்ளி கேட்டு எந்த பத்திரிக்கையிலும் பொது டெண்டர் விடவில்லை என்றும் ,ஒரு குறிப்பிட்ட சொசைட்டி மாபியாகளிடம் ஒன்றுக்கு மேற்பட்ட விலைப்பட்டியல் தயாரித்து வாங்கியதாக அறிகிறோம், மார்க்கெட் விலையைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் காரணம் என்ன? அரசு அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்வது நியாயமா? ஆகையால் தாங்கள் உடனே தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். தாங்கள் நடவடிக்கை எடுக்க தாமதமாகும் பட்சத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். உடன் மாநில விவசாய அணி செயலாளர் இராமகிருஷ்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார், நகர பொதுச்செயலாளர்கள் முனியராஜ், சீனிவாசன், நகர செயலாளர் அழகு மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button