இந்தியா

சிலைதிருட்டு புகார் , நித்யாணந்தாவை,போலீஸார் விசாரணை செய்யதிட்டம்

advertisement by google

Winmeennews.com

advertisement by google

கயிலாயத்திற்கு அழைத்து செல்ல யானை இல்லாவிட்டாலும் பூனையாவது வரும் என்று நித்யானந்தா காத்திருக்கும் நிலையில், அவர் மீது அளிக்கப்பட்டுள்ள சிலைத் திருட்டு புகாரால் அவரை விசாரணைக்கு அழைத்துவர தமிழக போலீசார் பிடதி செல்ல உள்ளனர்

advertisement by google

கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து உள்ளூர் வெளியூர் வெளிநாடு என ஏராளமான இளம்பெண்களை ஆனந்தக் கழிப்புடன் சன்னியாசம் பெற வைத்தவர் நித்தியானந்தா..! அண்மையில் யுடியூப்பில் தோன்றி அருளாசி வழங்கிய நித்தி, சேலம் மேட்டூர் அணைக்குள் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலை போன ஜென்மத்தில் தான் கட்டியதாகவும் தற்போது அந்த கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, மேட்டூர் அணையின் கோவில் அமைந்துள்ள பாலவாடி கிராம மக்கள் காவல் நிலையத்தில் நித்தியானந்தா மீது புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூல லிங்கத்தை எடுத்து சென்றதை நித்தியானந்தாவே ஒப்புக் கொண்டதால் அவரிடம் இருந்து மீட்டு லிங்கத்தை மீட்டுத்தரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.இதையடுத்து கர்நாடக மாநிலம் பிடதிக்கு சென்று நித்தியானந்தாவை அழைத்து வந்து மூல லிங்கம் எங்கே உள்ளது என்பது குறித்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.நித்தியை அழைத்து வர பிடதி ஆசிரமத்துக்கு போலீஸ் செல்ல உள்ள நிலையில், கயிலாயத்தில் இருந்து தன்னை அழைத்து செல்ல யானை வராவிட்டாலும் பூனையாவது வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பதாக நித்தி தெரிவித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button