இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவைக்கு நாளை பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதை முன்னிட்டு, அவிநாசி சாலையில் உள்ள நிகழ்வு நடக்கும் இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் பார்வையிடல்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவை: நாளை பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதை முன்னிட்டு, அவிநாசி சாலையில் உள்ள நிகழ்வு நடக்கும் இடங்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் பார்வையிட்டனர்
.
பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதாகட்சியின்தேர்தல் பிரச்சாரக் கூட்டப் பரப்புரைக்காக கோவை வரவிருப்பதாகவும், தமிழகத்திற்கு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார், தமிழக மக்களின் மீது பெரும் அக்கரை உள்ளவர்‌ பிரதமர் மோடி, என்று தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்
மேலும், அவர் தெரிவிக்கையில், பாரதிய ஜனதா கட்சி நடத்திய வேல் யாத்திரை மூலமாக தமிழக அரசியல் களத்தை கவர்ந்துள்ளது, எங்கள் அணுகுமுறையை பின்பற்றி எதிர் கட்சிகளும் வேலை கையில் எடுத்திருப்பதே, எங்கள் கட்சி வலுப்பெற்று வருவதற்கான சான்று, என்றார்.
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே தளத்தில் செயல்படுவோம் என்றும், 234 தொகுதிகளிலும், எங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாடுபடுவோம். நாங்கள் தேர்தலில் பங்கு பெறாத தொகுதிகளில் எங்கள் கூட்டணி கட்சியின் வெற்றிக்கு துணையாக நிற்போம்”, என்றும் தெரிவித்தார்.
காவிரி- குண்டாறு இணைப்பு திட்டம் குறித்து பேசுகையில், இரு மாநில மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவெடுக்கப்படும் என்றும், தேசிய கட்சியாகிய எங்களுக்கு இரண்டு மாநிலங்களும் சமம்தான். இரு மாநில விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தீர்வுகள் இருக்கும், என்று கூறினார்.
பின்னர், பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், நாளை பா.ஜகவின் தேர்தல் பிரச்சார பரப்புரை மற்றும் அரசு விழா சம்பந்தமாக பிரதமர் மோடி வருகை தருவதாகவும், ஏற்கனவே, பட்ஜெட்டில் தமிழகத்திற்கு 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதில்‌ சிலவற்றை நாளை பிரதமர் மோடி துவங்கிவைக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இது முற்றிலும் பாரதிய ஜனதா கட்சியின் பரப்புரை விழா என்றும் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுக்கு பின்னர் சேர்ந்து கூட்டங்கள் நடத்தப்படும், என்று கூறினார்.
கோவை, ஊட்டி, சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து மக்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஒரு லட்சத்திற்கும் மேலானோர், கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும், இந்த பிரச்சார பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சியினருக்கு பெரும் ஊக்கம் அளிப்பதாகவும், மக்களை அணுக இன்னும் பெரிய வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button