இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்விவசாயம்

குட்டிகளுடன் உலாவந்த கரடி

advertisement by google

✍நீலகிரி மாவட்டம் கோத்தகிாி குன்னூர் சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து குட்டிகளுக்குப் பழம் பறிக்க மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது

advertisement by google

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் அடிக்கடி கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த இரண்டு மாத காலமாக கோத்தகிரி குன்னூர் சாலையில் உள்ள அரவேணு அளக்கரை பகுதிகளில் கரடி இரண்டு குட்டிகளுடன் உலா வருகிறது
இந்த நிலையில், அரவேணு சாலையில் கரடி ஒன்று குட்டியுடன் உணவிற்காக சாலையில் உலா வந்தது. பின்னர், தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தது உணவிற்காக மரத்தில் ஏறி குட்டிகளுக்கு பழம் பறிக்க முயன்றது. அது முடியாமல் போகவே மீண்டும் மரத்தில் இருந்து கீழே இறங்கியது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஒட்டிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர். பின்னர், 30 நிமிடங்கள் கழித்து கரடி குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button