t

சந்திரயான்-3 மூலம் உலக அரங்கில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு போட்டியாக மாபெரும் நிலையை அடையப்போகும் இந்தியா✍️இந்திய விண்வெளி துறைக்கு பெரும் முதலீட்டையும், வருவாயையும் பெற்று தரும்✍️நிலவின் தென் துருவத்தில் லேண்டரை மென்மையாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைக்க போகும் இந்தியா

advertisement by google

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய விண்ணில் ஏவி உள்ள சந்திரயான் -3 விண்கலம், அதன் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

advertisement by google

சந்திரயான் -3இன் விக்ரம் லேண்டரும், பிரக்ஞான் ரோவரும் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளன. இந்த முயற்சி வெற்றிபெற்றால், நிலவில் லேண்டரை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.

advertisement by google

அது மட்டுமின்றி நிலவின் தென் துருவத்தில் லேண்டரை மென்மையாகத் தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைக்கும்.

advertisement by google

இன்னும் சொல்லப் போனால், நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய 14 ஆண்டுகளுக்கு முன், சந்திரயான்-1 விண்கலத்தை இந்தியா நிலவுக்கு அனுப்பியது. நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை சந்தியரான்-1 ஆய்வு செய்தது.

advertisement by google

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி தீவிரமடைந்தது. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளும் விண்வெளித் துறையில் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்துள்ளன.

advertisement by google

இருப்பினும், மனித வரலாற்றில் விண்வெளி ஆய்வை முதல் முறையாகத் தொடங்கிய பெருமை ரஷ்யாவையே சேரும். அக்டோபர் 4, 1957இல், தனது முதல் செயற்கைக்கோளான ‘ஸ்புட்னிக்’கை ரஷ்யா விண்ணில் ஏவியது.

advertisement by google

ஆனால், 1947இல் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு விவசாயம், தொழில் துறை, உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்றவற்றில் இந்தியா கவனம் செலுத்தியது. அதாவது அமெரிக்காவும், ரஷ்யாவும் விண்வெளித் துறையில் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டிருந்த ஆரம்ப காலத்தில், இந்தியா இந்தத் துறையில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

advertisement by google

இந்தக் குறையைப் போக்கும் விதத்தில், 1962இல் விண்வெளி ஆய்வுக்கான இந்திய தேசியக் குழு உருவாக்கப்பட்டது. விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்றவர்கள் இக்குழுவின் ஆரம்பக் கால உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, 1969இல், விண்வெளி ஆய்வுக்கான தேசியக் குழு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமாக (ISRO) மாற்றப்பட்டது.

இஸ்ரோ உருவாக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பின், 1975இல், இந்தியா தனது முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்தியது. இந்த செயற்கைக்கோளை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா விண்ணில் செலுத்தியது.

ஆரியபட்டாவில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு, 1980இல் இந்தியா தனது சொந்த முயற்சியில் முதல் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதன்மூலம் செயற்கைக்கோளை செலுத்தி சாதித்த ஏழாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

ஆனால் இன்று உலக நாடுகள் வியக்கும் விதத்தில் சந்திரன், செவ்வாய் என்று வேற்று கிரகங்களுக்கு சந்திரயான், மங்கள்யான் போன்ற விண்கலங்களை அனுப்பும் அளவுக்கு, விண்வெளித் துறையில் இந்தியா அபாரமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

செயற்கைக்கோள்களின் சேவை இன்று அனேகமாக அனைத்துத் துறைகளுக்கும் இன்றியமையாததாகி விட்டது.

அதாவது பாதுகாப்பு, கல்வி, தொலைத்தொடர்பு, பேரிடர் மேலாண்மை, காலநிலை மாற்றம், காடுகள் பாதுகாப்பு, தொலைதூர மருத்துவம், வானிலை முன்னறிவிப்பு, வங்கி, தொலைக்காட்சி, இணையதளம், கடல்சார் பணிகள், விமானப் போக்குவரத்து எனப் பல்வேறு முக்கிய துறைகளிலும் செயற்கைக்கோள்களின் பயன்பாடு இன்று இன்றியமையாததாக உள்ளது.

இன்றைய நவீன உலகில் இந்தத் துறைகளில் சிறந்து விளங்க, அனைத்து நாடுகளுக்கும் செயற்கைக்கோள்களின் சேவை தேவைப்படுகிறது. ஆனால் உலகின் அனைத்து நாடுகளும் விண்வெளி ஆய்வுகளை தாங்களாகவே மேற்கொள்ள முடியாத நிலைதான் உள்ளது.

விண்வெளி ஆய்வு என்பது அதிக பணம் செலவழிக்க வேண்டிய துறையாக இருந்து வருகிறது. அத்துடன் பிற துறைகளைப் போல, தேவையான பணத்தை முதலீடு செய்து லாபம் ஈட்டுவதைப் போன்று, விண்வெளி ஆய்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.

விண்வெளித் துறையில் வெற்றி பெற பெருமளவு நிதி மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த மனித வளமும் தேவை. எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற முடியும் என்றும் சொல்ல முடியாது.

ஏனெனில் விண்வெளிப் பயணங்களின் ஆரம்பக் கட்டத்தில் வெற்றி விகிதம் மிகக் குறைவு. ஆரம்பக் கட்டத்தில் இந்த ஆய்வில் ஒரு நாடு வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

சோதனைகள் தோல்வியடைந்தால் முதலீடு செய்ய பணம் அத்தனையும் வீணாகிவிடும். இதன் காரணமாகத்தான் ஏழை மற்றும் வளரும் நாடுகளால் ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழித்து விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

பல்வேறு கடினமான முயற்சிகளுக்குப் பிறகு விண்வெளி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், அதன் பலன்களை அறுவடை செய்ய நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரும். இதன் காரணமாகவும் பல நாடுகள் இந்தத் துறையில் பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இல்லை.

இவற்றைத் தவிர, புவிசார் அரசியலும் விண்வெளி சோதனைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

உள்நாட்டுப் போர் மற்றும் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவும் நாடுகள், விண்வெளி பரிசோதனைகளுக்கு நிதி ஒதுக்க முடியாது. இத்தகைய நாடுகள், செயற்கைக்கோள் சேவையைப் பெற பிற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டும்.

செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான நிதி, நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பம் இருந்தாலும் சில நாடுகள் இவற்றை விண்ணில் செலுத்த இயலாத நிலையும் உள்ளது.

அதாவது, கடலோரம் ராக்கெட்டை ஏவுவதற்கான இடம் மட்டுமல்ல. ராக்கெட்டில் எரிபொருள் தீரும் வரை, அது விண்ணில் பயணிக்க பொருத்தமான கடல் பகுதி தேவை.

இதன் காரணமாக, நான்கு புறமும் நிலத்தால் சூழப்பட்ட நாடுகள், அதாவது கடற்கரை இல்லாத நாடுகள் மற்றும் பிற நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள நாடுகள் ராக்கெட்டுகளை ஏவ முடியாது.

எனவே, கடல் மற்றும் நீண்ட கடற்கரை கொண்ட நாடுகளில் இருந்து மட்டுமே செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த முடியும்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் விண்வெளி ஆய்வுக்கு அதிகம் செலவிடுகின்றன. இதனால் இந்த நாடுகளின் உதவியுடன் செயற்கைக்கோள்களை செலுத்த விரும்பும் நாடுகள், தங்களின் விண்வெளித் திட்டங்களுக்காக அதிக செலவிட வேண்டி வரும்.

ஆனால், அத்தகைய நாடுகளுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இந்தியாவின் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே பல வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களைக் குறைந்த செலவில் இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆனால், குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது மட்டும் இந்தத் திட்டங்களின் வெற்றியாகக் கருதப்படாது. செலுத்தப்படும் செயற்கைக்கோள்களின் வெற்றி விகிதமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விண்வெளி ஆய்வுகளை குறைந்த செலவு மற்றும் அதிக வெற்றி விகிதத்துடன் மேற்கொள்ளும் நாடுகளையே, தங்களது செயற்கைக்கோள்களை அனுப்ப பிற நாடுகள் அணுகும்.

இந்த வகையில், பிற நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்களை ஒப்பிடும்போது, குறைந்த செலவில் அதிக வெற்றிகளை இஸ்ரோ பதிவு செய்துள்ளது.

இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி, இதுவரை 34 நாடுகளைச் சேர்ந்த 431 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை, 124 விண்கலங்களில் இந்தியா விண்ணில் செலுத்தியுள்ளது.

அல்ஜீரியா ஸ்லோவாக்கியா, லிதுவேனியா போன்ற சிறிய நாடுகளும், அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் போன்ற பெரிய நாடுகளும், இஸ்ரோவின் சேவையைப் பயன்படுத்தி வருகின்றன.

இதுபோன்ற வணிகரீதியான நோக்கங்களைத் தாண்டி, செயற்கைக் கோள்களை செலுத்த, சில நேரங்களில் ஏழை நாடுகளுக்கு இஸ்ரோ இலவச சேவையும் அளித்து வருகிறது.

நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு விண்வெளித் துறையில் ஏற்கெனவே இலவச சேவைகளை வழங்கியுள்ளோம் என்று பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற உயர்நிலைக் கூட்டத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

எல்விஎம் (LVM) போன்ற பெரிய ராக்கெட்டுகளை மிகக் குறைந்த அளவில் தயாரித்து வருவதாகவும், இவற்றின் உற்பத்தியை தொழில்ரீதியாக பெரிய அளவில் கொண்டு செல்வதற்கான அவசியம் இருக்கிறது என்றும் சோம்நாத் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திசை நோக்கி இஸ்ரோ முன்னேறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவைப் போல, ஓராண்டில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவும் திறன் தற்போது இஸ்ரோவிடம் இல்லை என்றும் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் சோம்நாத் கூறியிருந்தார்.

ஆனால், உலகிலேயே இன்று குறைந்த செலவில் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளும் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

கடந்த 2008இல், ரூ.386 கோடி செலவில் சந்திரயான்-1 திட்டத்தை இஸ்ரோ நிறைவேற்றியது. 2014இல் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான மங்கள்யான் திட்டமும் 450 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டது.

இதுவே, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்காவின் நாசா மேற்கொண்ட ஆய்வுக்கான மொத்த திட்டச் செலவு, இஸ்ரோவின் மங்கள்யான் திட்டத்தின் செலவை ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகம் என்று பிபிசி சயின்ஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் மங்கள்யான் திட்டத்தை உலகமே வியந்து பாராட்டியது.

மங்கள்யான் திட்டத்தைத் தொடர்ந்து, 2019இல், சந்திரயான்-2 திட்டம் 978 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டதாகவும், ககன்யன் திட்டமும் இதே முறையில் முடிக்கப்பட உள்ளதாகவும் வான கோள்களுக்கான இந்திய சங்கத்தின் இயக்குநர் என்.ஸ்ரீ ரகுநந்தன் பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது இஸ்ரோ செயல்படுத்தி உள்ள சந்திரயான்-3 திட்டத்திற்கான செலவு 615 கோடி ரூபாய் மட்டுமே.

சந்திரயான்-3 விண்கலத்தின் பயணம் தொடங்கிய பிறகு, ரஷ்யாவின் லூனா-25 நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க முயன்ற லூனா-25இன் முயற்சி தோல்வி அடைந்தது.

ஆனால் அதேநேரம், சந்திரயான்-3 விண்கலம் சுமந்து சென்ற லேண்டர் மற்றும் ரோவர்கள் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்க உள்ளன.

இதன் மூலம், மிகக் குறைந்த செலவில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யும் நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அத்துடன், சந்திரயான்-3 திட்டத்திற்குப் பிறகு, இஸ்ரோ மீதான உலக நாடுகளின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றால், விண்வெளித் துறையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இந்தியா போட்டியிடும் நிலையை எட்டும். அத்துடன் விண்வெளி தொடர்பான வர்த்தகரீதியான பயணங்களில் இந்தியா சிறந்து விளங்க, இந்த வெற்றி பெரிதும் உதவும்.

கடந்த 2020இல் 9.6 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், 2025இல் 13 பில்லியன் டாலராக, அதாவது வருடத்திற்கு 6 சதவீதம் என்ற அளவுக்கு வளர்ச்சி பெறும் என்று எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் கணித்துள்ளது.

இதில் செயற்கைக்கோள் சேவைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது செயற்கைக்கோள் சேவைகள் பயன்படும் துறைகளைத் தவிர, சைபர் செக்யூரிட்டி, தரவுகள் பாதுகாப்பு போன்ற நவீன யுகத்திற்கான தொழில்நுட்ப துறைகளிலும் செயற்கைக்கோள் சேவைகளை அதிகம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் மற்றும் சேவைகள் உள்ளிட்ட நான்கு துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பு துறையும் வளர்ச்சி அடைய உள்ளது.

இந்திய விண்வெளிப் பொருளாதாரத்தில், 2025ஆம் ஆண்டுக்குள் செயற்கைக்கோள் துறை வேகமான வளர்ச்சியைப் பெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2020இல், 447 பில்லியன் டாலர்களாக இருந்த உலக விண்வெளிப் பொருளாதாரம், 2025இல்,600 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2014 முதல் 2019 வரை, 26 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ, 167.5 மில்லியன் டாலர்கள் (சுமார் 1391.34 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்திற்கு பிறகு, இந்த வருவாய் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020இல், நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் பங்கை வகித்த விண்வெளிப் பொருளாதாரத் துறை, மேலும் வளர்ச்சி அடைவதோடு, அதிக வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்க உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் Space X, Blue Origin, Virgin Galactic போன்ற ஆயிரக்கணக்கான தனியார் நிறுவனங்கள் விண்வெளித் துறையில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன. அதாவது, தனியார் விண்வெளித் திட்டங்களில் அமெரிக்கா முன்னணி வகிக்கிறது. இந்தியாவிலும் தற்போது இத்துறையில் தனியார் பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

எர்ன்ஸ்ட் அண்ட் யங் அறிக்கையின்படி, 2021 இல், 5,582 தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியா 5வது இடத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2019 க்கு பிறகு, இந்தியாவிலும் விண்வெளி துறையில் பங்களிப்பு ஆற்றிவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 2021 இல், இந்திய விண்வெளித் துறையில்,

நூற்றுக்கணக்கான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்களிப்பு ஆற்றி வருகின்றன.

நவம்பர் 18, 2022 இல், ஸ்கை ரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த விக்ரம் எஸ் ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களின் இதுபோன்ற பங்களிப்பு தொடர்ந்தால், அமெரிக்காவை போன்று இந்தியாவிலும் தனியார் வர்த்தக செயற்கைக்கோள்கள் மற்றும் ராக்கெட் ஏவுதல் எண்ணிக்கை அதிகரிக்கும். அத்துடன் விண்வெளி சுற்றுலாவும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

இது, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு புதிய ஊக்கத்தை தரும் என்பதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்திரயான் -3 வெற்றியின் மூலம், விண்வெளி தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்ய முதலீட்டாளர்களை இந்தியா ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 இல், நாட்டின் விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மொத்த முதலீடு 68 மில்லியன் டாலர்களாக இருந்தது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு 47 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்வெளி துறையில் கால் பதித்துள்ளன.

அத்துடன் இந்த நிறுவனங்கள், 196 சதவீதம் ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் முன்னணியில் உள்ளன.

பிற நாடுகளை ஒப்பிடுகையில், குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை செயல்படுத்தும் திறன், இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உள்ளது என எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018 இல் தொடங்கப்பட்ட ஸ்கை ரூட் ஏரோ டெக்னாலஜிஸ் நிறுவனம், 3டி பிரிண்டிங் திறன் கொண்ட, கிரையோஜெனிக் ராக்கெட் எஞ்சினை தயாரித்துள்ளது. இது ஒரு ராக்கெட்டில் உள்ள கூறுகளின் எண்ணிக்கையை குறைக்கலாம், செலவைக் குறைக்கலாம் மற்றும் ஒரு விண்வெளி திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரத்தையும் 80 சதவீதம் குறைக்கலாம்.

அதேபோல், பெல்லா ட்ரிக்ஸ் ஏரோ ஸ்பேஸ் மற்றும் அக்னிகுல் போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்தியாவின் விண்வெளித் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும், இந்திய விண்வெளி துறைக்கு பெரும் முதலீட்டையும், வருவாயையும் எதிர்காலத்தில் பெற்று தரும். இதன் பயனாக இந்த துறையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு போட்டியாக இந்தியா மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button