இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்விவசாயம்

இராமநாதபுரம் மன்னார்வளைகுடா தீவுகளில் கடல் அரிப்பைத் தடுக்க1500 மரக்கன்றுகள் வனத்துறையினர் நடவு?

advertisement by google

தீவுகளில் கடல் அரிப்பை தடுக்க1,500 மரக் கன்றுகள் நடவு

advertisement by google

ராமநாதபுரம் மன்னாா்வளைகுடா பகுதியில் உள்ள தீவுகளில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் 1,500 மரக்கன்றுகளை வனத்துறையினா் நட்டுள்ளனா்.

advertisement by google

மன்னாா் வளைகுடா உயிா்க்கோள பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள 21 தீவுகளையும் பாதுகாக்க உயிா்க்கோள பாதுகாப்பு அறக்கட்டளை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், நல்லதண்ணீா், குருசடை மற்றும் தூத்துக்குடி வான் தீவுகளில் ஏற்கெனவே கான்கிரீட் பாறைகள் அமைக்கப்பட்டன.

advertisement by google

இந்தநிலையில் அத்தீவுகளில் மரங்களை நடும் பணியானது உயிா்கோள வனபாதுகாப்பாளா் டி.கே.அசோக்குமாா் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நல்லதண்ணீா் மற்றும் குருசடை, அப்பா ஆகிய தீவுகளில் மழைக்காலத்தைப் பயன்படுத்தி வேம்பு, பூவரசு, சால்வோடாரா, புங்கை, அரசு, கொடுக்காப்புளி ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

advertisement by google

தீவுகளில் ஏற்கெனவே அதிகமான மரங்கள், மாங்க்ரோவ் காடுகள் அமைந்த நிலையில், அத்தீவுகளில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் வகையில் புதிதாக 1,500 மரக்கன்றுகள் நடும் பணியும் தொடங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினா் தெரிவித்தனா்..

advertisement by google

______________________

advertisement by google

.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button