தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டியில், ஆங்கிலேயர்கள் காலத்தில் வரையறுக்கப்பட்ட போலீஸ்நிலைய எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டி, கோவில் முன்பு த.மா.கா.வினர், நகரசெயலாளர் ராஜாகோபால் தலைமையில்நூதன போராட்டம்✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி கோவில் முன்பு த.மா.கா.வினர் நூதன போராட்டம்

advertisement by google

கோவில்பட்டி:

advertisement by google

கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர், உருளை குடி, கருங்காலிப்பட்டி, சிதம்பரா புரம், பெருமாள் பட்டி, லிங்கம்பட்டி, ஊத்துப் பட்டி, வரதம்பட்டி, விஸ்வநாததாஸ் நகர் ஆகிய கிராமங்கள் நாலாட்டின் புதூர் போலீஸ் எல்லைக்குள் வருகிறது.

advertisement by google

இந்த கிராமங்களில் இருந்து போலீஸ் நிலையம் சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் போலீசாரும், பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

advertisement by google

எனவே ஆங்கிலேயர்கள் காலத்தில் வரையறுக்கப்பட்ட போலீஸ் நிலைய எல்லை களை மாற்றி அமைக்க வேண்டும்.

advertisement by google

சுமார் 30 கிராம மக்கள் பயன்பெறும் விதமாக, கடலையூரை தலைமையிடமாக கொண்டு தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி, நேற்று கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட் டிருந்தது.

advertisement by google

ஆனால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி கிடைக்காததால் த.மா.கா.வினர் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு தேங்காய் மீது சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.

advertisement by google

பின்னர் தேங்காய் விடலை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு, த.மா.கா. நகரத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மாவட்ட விவசாய அணி தலைவர் தளவாய்சாமி, செயற்குழு உறுப்பினர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டத் துணைத் தலைவர் முத்துசாமி, நகர துணைத் தலைவர்கள் ராஜமாணிக்கம், செண்பக ராஜ், விக்னேஷ்ராஜா, நிர்வாகிகள் மூர்த்தி, சரவணன், வின்சென்ட், பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு தேங்காய் விடலை போட்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button