பயனுள்ள தகவல்மருத்துவம்

பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்?காரணங்கள்?தீர்வுகள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

? பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்

advertisement by google

பற்களில் நோய்த்தொற்று என்பது பலரும் தீவிரமாகும் வரை அறிவதில்லை. அது வேர் வரை சென்று உபாதையை உண்டாக்கிய பிறகே சிகிச்சை செல்கிறோம். பற்களில் நோய்த்தொற்றுகள் எனப்படும் சீழ்க்கட்டி உருவாகும் போது உண்டாகும் அறிகுறிகள் மற்றும் காரணங்களை தெரிந்துகொள்வோம்.

advertisement by google

பல்லில் உண்டாகும் நோய்த்தொற்றுகள் தீவிரமாகும் போது பற்களில் சீழ் பிடித்து கட்டியாக மாறக்கூடும். நோய்த்தொற்று உருவாகி அது வேர் வரை பரவி அதன் கீழ் சீழ் பிடித்தலை உண்டாக்குகிறது. இந்த நோய்த்தொற்று சாதாரணமான உபாதையை உண்டாக்காது. தீவிரமான வேதனையோடு கூடிய வலியை போக்க தீவிர சிகிச்சையும் தேவைப்படுகிறது.

advertisement by google

பற்களில் நோய்த்தொற்று என்பது உறுதியான தொடர்ச்சியான பல்வலியில் தொடங்குகிறது. பல் ஈறுகளின் அடியில் இருக்கும் நிணநீர் முனையில் வீக்கம் உண்டாக்குகிறது.பற்களில் தொற்றுநோய் ஏற்பட்டதற்கான அறிகுறிகளில் பல் வலியோடு மற்ற அறிகுறிகளையும் உண்டாக்குகிறது.

advertisement by google

உண்டவை மென்று சாப்பிடும் போது கூச்சமும் வலியும் உண்டாக கூடும். குளிர்ந்த அல்லது மிதமான சூட்டில் இருக்கும் போது உணவை எடுத்துகொண்டால் இது இன்னும் அதிகமாக கூடும்.

advertisement by google

பற்களில் சீழ்வருதல்

advertisement by google

மென்மையான உணவாக இருந்தாலும் அதை மெல்லும் போது சிரமத்தையும் வலியையும் உண்டாக்கும். இதனால் உணவை எடுத்துகொள்ளவே பயப்படுவார்கள். எப்போதும் உள்ளுக்குள் காய்ச்சல் உணர்வு இருக்கும்.

advertisement by google

தினமும் இரண்டு வேளை பல் துலக்கினாலும் வாய் துர்நாற்றம் வரக்கூடும். தொடர்ந்து ஒருவிதமான வாய் துர்நாற்றம் உணர்ந்தாலோ அதிகரித்து வந்தாலோ அதுவும் பற்களில் நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

இதற்கு காரணம் பல் பராமரிப்பதில் மோசமான பழக்கமாகவும் இருக்கலாம். பல்லை முறையாக சுத்தம் செய்யாமல் இருப்பதும் கூட பல் நோய்தொற்றுக்கு காரணமாக இருக்கலாம். மோசமான சுகாதாரத்தால் தொற்றுநோய் பரவுகிறது. பாக்டீரியாவில் சுரக்கும் அமிலமானது பற்களில் சொத்தை உருவாக காரணமாகிறது.

அதிகப்படியான இனிப்பு எடுத்துகொள்வதும் குறிப்பாக பற்களில் படும்படி இனிப்பு மென்று சாப்பிடுவதும் கூட பற்களில் நோய்த்தொற்றூ உருவாக காரணமாக இருக்கலாம். அதிக இனிப்பு எடுத்துகொள்வதால் இது பாக்டீரியாவை அதிகமாக ஊக்குவிக்கும்

பற்களில் தொடர்ந்து வலியும் துர்நாற்றமும் இருந்தாலே அது பற்களின் உண்டாகும் நோய்த்தொற்றை குறிப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தாமதிக்காமல் பல் மருத்துவரை அணுகி பற்களின் ஈறுகளில் இருக்கிறதா பரவியிருக்கிறதா என்று கண்டறிய முடியும்.

தொற்று பரவாமல் மேற்கொண்டு சோதனைகளை செய்வார். பற்களில் எக்ஸ் – கதிர்கள் சோதனை செய்யப்படும். இது தொற்று இருக்கும் இடத்தை கண்டறிய உதவக்கூடியது. அதே போன்று பற்கள் மற்றும் தாடைகளின் நோய்த்தொற்று அளவை தீர்மானிக்கவும் செய்யும்.

நாப்கின் யூஸ் பண்ணும் போது நோய்த்தொற்றை உண்டாக்கும் இந்த தவறை நீங்களும் செய்றீங்களா?
ஆரம்ப கட்ட நோய்த்தொற்றாக இருந்தால் மருந்துகள் மூலமும் பராமரிப்பு மூலமும் மட்டுமே சரி செய்ய முடியும்.

பற்களில் நோய்த்தொற்று அதிகரித்து அவை பக்கத்தில் இருக்கும் பற்களிலும் பரவிவிட்டால் சீழ்க்கட்டிகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும்.

பற்கள் பராமரிப்பு

ஒரு வேளை பற்கள் பக்கத்தில் இருக்கும் பல்லிலும் படர்ந்து அருகருகில் இருக்கும் பற்களின் மீதும் படிந்து விட்டால் வேர் சிகிச்சை மூலம் பற்களை காப்பாற்ற நினைப்பார்கள். அதன் ஆழம் வரை தொற்று பரவி பக்கத்தில் பல்லை பாதித்திருந்தால் பல்லை தனியாக பிரித்தெடுப்பதுதான் இறுதியான சிகிச்சை முறையாக இருக்கும்.

பற்களில் தொற்று வருவதற்கு முதல் காரணமே பற்களை மோசமாக பராமரிப்பதால் தான். தினமும் இரண்டு வேளை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை பல் மருத்துவரை அணுகி பற்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதிக இனிப்பு எடுக்க கூடாது. ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்புளிக்க வேண்டும்.

பற்களை முறையாக பராமரித்தாலே பற் சொத்தை, பற்களில் படும் நோய்த்தொற்றை வராமல் தவிர்க்க முடியும். ஏனெனில் பல் சொத்தையை காட்டிலும் மிக வேதனை தரக்கூடியது பற்களில் உண்டாகும் நோய்த்தொற்று அதாவது பற்களில் தொற்று ஏற்பட்ட இடத்தில் உண்டாகும் சீழ்க்கட்டி.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button