இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

தேனி மாவட்டம் கம்பத்தில் 180 கிலோ கஞ்சா கடத்திய 3 பெண்கள் உட்பட5பேர் கைது?2பேர் தப்பி ஓட்டம்?முழுவிவரம்-விண்மீன் நியூஸ்

advertisement by google

கம்பத்தில் 180 கிலோ கஞ்சா பறிமுதல் . 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. இருவர் தப்பி ஓட்டம்.

advertisement by google

தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலைமணிக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று காலை 10 மணி அளவில் உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சின்னகண்ணு மேற்பார்வையில் கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி,சார்பு ஆய்வாளர்கள் திவான்மைதீன் ரோமியோதாமஸ் மற்றும் சில காவலர்கள் மணிக்கட்டி ஆலமரம் என்ற பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது,
அவ்வழியாக வந்த TN-63, E1414 என்ற பிக் அப் வாகனத்தை நிறுத்திய போது அதன் ஓட்டுனர் மற்றும் மற்றொருவர் தப்பி ஓடிவிட்டனர்.
அந்த வாகனத்தை சோதனை செய்த போது ஒன்பது சாக்குப் பைகளில் 180 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமாக மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அந்த வாகனத்தில் வந்த சுகப்பிரியா, முத்துச்செல்வம்,சுவாதி, ஈஸ்வரி, சந்தோஷ்,ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாகவும், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் மலையடிவாரத்தில் பதுக்கி வைத்திருந்ததாகவும்,தற்பொழுது தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் வாகனத்தை ஏற்பாடு செய்து பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை எடுத்துக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபர்கள் செல்லக்காளி மற்றும் ஜெயக்குமார் எனவும் தெரிவித்தனர்.
வாகனத்துடன் 180 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் கஞ்சாவை கடத்தி வந்த 3 பெண்கள் உள்பட 5 பேரையும் கைது செய்தனர்.
180 கிலோ கஞ்சாவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கஞ்சாவை கடத்தி வந்து ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தப்பியோடிய செல்லக்காளி மற்றும் ஜெயக்குமாரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

advertisement by google

விண்மீன் நியூஸ்க்காக A. சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button