இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விரிவான செய்திகள்:இலங்கை பிரதமரை சந்தித்தார் தி மு க MP கனிமொழி மேலும் பல

advertisement by google

????விண்மீண்நியூஸ்????இலங்கை பிரதமரை சந்தித்தார் திமுக எம்பி கனிமொழி : மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை

advertisement by google

அப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. இலங்கை பிரதமரிடம் எடுத்துரைத்தார்.

advertisement by google

மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

advertisement by google

முன்னதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரையும் கனிமொழி எம்.பி., ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினர். 

advertisement by google

⚫⚫ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

advertisement by google

?♨ போக்குவரத்து விதிகளை மீறியதாக சேலத்தில் ஒரே நாளில் 1,585 பேர் மீது வழக்குப்பதிவு

advertisement by google

சேலம்,

advertisement by google

?♨சேலத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமுறைகள் மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்று முன்தினம் மாநகரின் பல இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 331 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 16 பேர், இருசக்கர வாகனங்களில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 681 பேர் உள்பட மொத்தம் 1,585 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநகரில் விபத்துகளை குறைக்க போலீசாரின் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றும் போக்குவரத்து விதிமுறைகள் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரித்துள்ளார்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?♨பெருமாகவுண்டம்பட்டியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து சேதம் : இளம்பிள்ளை ஏரி மதகு சீரமைப்பு

இளம்பிள்ளை,

?♨இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் இளம்பிள்ளை ஏரி உள்ளது. இந்த ஏரி நீர் பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி வழியாக நடுவனேரிக்கு சென்றடையும்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சில இடங்களில் மழை பெய்தது. இதேபோல் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் இளம்பிள்ளை ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. அப்போது ஏரி மதகு உடைந்தது. இதையடுத்து இளம்பிள்ளை ஏரியில் இருந்து நடுவனேரிக்கு செல்லும் வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்தது. ஆனால் வாய்க்காலில் குப்பை, கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டும், தூர்வாரப்படாமலும் இருந்ததால் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து பெருமாகவுண்டம்பட்டி குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள வீடுகள், தறிக்கூடங்களில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள் நாசம் ஆனது. தறிக்கூடங்களில் இருந்த சேலை உள்ளிட்ட துணிகள் தண்ணீரில் நனைந்து சேதம் ஆனது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலர் தாமோதரன், மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் வருவாய்த்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள் அங்கு சென்றனர். பொக்லைன் எந்திரம் மூலம் மதகு உடைப்பை சரிசெய்தனர். பின்னர் வாய்க்காலில் இருந்த அடைப்புகளை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.

பின்னர் நேற்று துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மழைநீர் புகுந்த பகுதிகளுக்கு சென்றனர். அங்கு துப்புரவு பணிகளை செய்தனர். டாக்டர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடிந்து விட்டது. தறிக்கூடங்களில் மழைநீரில் நனைந்த துணிகளை பணியாளர்கள் வெளியே எடுத்து வந்து வெயிலில் காய வைத்தனர்.

மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது பற்றி அறிந்ததும் வீரபாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி நேற்று அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் அவர் கூறும்போது, தண்ணீர் வீடுகளுக்குள் இனிமேல் புகுந்து விடாத அளவுக்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சாக்கடை வசதி செய்து தரப்படும். முதல்-அமைச்சரிடம் இதுபற்றி எடுத்து கூறி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அவருடன் வீரபாண்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வருதராஜ், ஆணையாளர் திருவேரங்கன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்லகுமார், தாசில்தார் ஆர்த்தி மற்றும் பலர் உடன் சென்றனர்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?♨ சேலத்தில், வெவ்வேறு இடங்களில் பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் தற்கொலை

சேலம்,

?♨சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தேவசகாயம் (வயது 55). பி.எஸ்.என்.எல். ஊழியர். இவருடைய மனைவி அல்போன்ஸ் மேரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் சக ஊழியர் ஒருவர் வாங்கிய கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார். அவர் சரியாக பணம் செலுத்தாததால் தேவசகாயம் சம்பளத்தில் கடன் தொகை பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பள்ளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(33), தறித்தொழிலாளி. இவருடைய மனைவி கோகிலா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவருடன் கோபித்துக் கொண்டு கோகிலா பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயகுமார், மனைவியிடம் போனில் தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவர் வரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பாட்ஷா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?♨ அண்ணா பிறந்தநாள் : சேலத்தில் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

சேலம்,

?♨தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசு சார்பில் சைக்கிள் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சேலம் பிரிவு சார்பில் சேலத்தில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சைக்கிள் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். சேலம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மாரிமுத்து கலந்து கொண்டு சைக்கிள் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் போட்டியானது, காந்தி மைதானத்தில் இருந்து தொடங்கி, தமிழ்ச்சங்கம், அண்ணா பூங்கா வழியாக மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடைந்தது.

முடிவில், 13-வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் கீர்த்திகா முதல் பரிசும், கவுசிகா 2-ம் பரிசும், சாதனா 3-ம் பரிசும் பெற்றனர். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் சோபிகா முதல் பரிசும், யுவராணி 2-வது பரிசும், மகாஸ்ரீ 3-ம் பரிசும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சவுமியா முதல் பரிசும், திவ்யா 2-ம் பரிசும், காவியா 3-ம் பரிசும் பெற்றனர்.

இதேபோல், 13-வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் கண்ணன் முதல் பரிசும், ரோகித் 2-ம் பரிசும், யோகேஷ் 3-ம் பரிசும், 15 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சுகன் முதல் பரிசும், மகேஷ் 2-ம் பரிசும், வாஜித் 3-ம் பரிசும், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சந்தோஷ் முதல் பரிசும், பாரதி 2-ம் பரிசும், மோகன்ராஜ் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞானசுகந்தி, மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் ஜெய்சந்த்லோடா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்?

?♨தேன்கனிக்கோட்டை அருகே சாலையை கடந்த காட்டு யானைகளால் பரபரப்பு

தேன்கனிக்கோட்டை,

?♨தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. மேலும், அவைகள் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று அய்யூர் வனப்பகுதியில் இருந்து 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்தன. இதைத் தொடர்ந்து அவைகள் அய்யூர்-பெட்டமுகிலாளம் செல்லும் சாலையை கடந்து சென்றன.

இதைப் பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து தூரத்திலேயே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டனர்.

யானைகள் அனைத்தும் சாலையை கடந்த பின்னரே வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காட்டு யானைகள் திடீரென சாலையை கடந்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ⚫⚫ சென்னை அண்ணாசாலையில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு – சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை,

⚫⚫புதுச்சேரியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பெருமாள்சாமி (வயது 50) என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். பெருமாள்சாமி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் பயணிகளை ஏற்றி வந்தார்.

இந்த கார் நேற்று இரவு சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒயிட்ஸ் சாலை சந்திப்பு அருகே வந்தபோது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. சுதாரித்துக் கொண்ட டிரைவர் பெருமாள்சாமி உடனே காரை ஓரமாக நிறுத்தி பயணிகளை கீழே இறக்கினார்.

அவர்கள் இறங்கியதும் காரின் முன்பகுதியில் புகை வந்த இடத்தை பெருமாள்சாமி ஆராய்ந்தார். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அவர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. அந்த வழியாக சென்ற மற்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

திருவல்லிக்கேணி மற்றும் எழும்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடு போல் காட்சி அளித்தது. இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

⚫⚫ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?சேலம் மாவட்ட செய்திகள்?

?♨ கல்லூரி பெண் ஊழியருக்கு மிரட்டல் : பிடிபட்ட டிரைவரின் செல்போனில் இளம்பெண்களின் நிர்வாண படங்கள் – போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

ஆத்தூர்,

?♨இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

?♨சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் டி.பார்ம் படித்து விட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பரான டிரைவர் ஒருவருக்கு அனுப்பினார். அந்த படத்தை வைத்து டிரைவர் அந்த கல்லூரி பெண் ஊழியரை தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி அந்த கல்லூரி பெண் ஊழியர், தனது தந்தையுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் தெரிவித்தார். அந்த கல்லூரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரையும், அந்த டிரைவரையும் ஆத்தூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த டிரைவரின் செல்போனை வாங்கி போலீசார் விசாரித்தனர். அந்த செல்போனில் மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரியவந்தது.

பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது, உல்லாசமாக இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் அதில் இருந்தது தெரியவந்தது. அந்த பெண்கள் யார்? அந்த படங்களை எடுத்தது யார்? படங்களை எப்படி எடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இதனால் அந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் விசாரணையில் செல்போனில் நிர்வாண படங்கள் இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் போன்று ஆத்தூரில் நடைபெற்று இருக்குமோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?அரியலூர் மாவட்ட செய்திகள்?

?♨கோவிலுக்கு சென்றபோது நேர்ந்த துயரம்: கார் மீது லாரி மோதல்; சகோதரர்கள் உள்பட 3 பேர் பலி

மீன்சுருட்டி,

?♨கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் மாலூர் அருகே உள்ள மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணசாமி மகன்கள் ஆனந்த்குமார் (வயது 30), அனில்குமார் (26), முனிராஜ் மகன் ஸ்ரீகாந்த் (20), சுப்பிரமணியன் மகன் நந்தகுமார் (24), ரவிக்குமார் மகன் ஜோசாந்த்(18), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் மற்றொரு ஸ்ரீகாந்த் (26) மற்றும் நாகேந்திரன் (28).

இவர்கள் 7 பேரும் பெங்களூரில் இருந்து திருநள்ளாறில் உள்ள ஒரு கோவிலுக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். காரை ஆனந்த்குமார் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழை மேடு கிராமம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆனந்த்குமார், அவரது தம்பி அனில்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நங்குடி கிராமத்தை சேர்ந்த காந்தி (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

?♨ஊடகதளம்
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?????????

✍➡இன்று “இரண்டாவது சனிக்கிழமை” என்பதால் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை

???????
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ? நேரலை செய்தி

?அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

?சென்னை மாம்பலத்தில் அமெரிக்க வாழ் தமிழரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் பணிபுரியும் கிருஷ்ணனை கடத்தி வழிப்பறியில் ஈடுபட்டது தொடர்பாக மணிகண்டன்,ஜெயந்திநாதன், பட்டாபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?நேரலை செய்தி ..

?திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய சோதனை !

?திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் சோதனை தொடர்கிறது
லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கொள்ளைக்கு துணை போதல், ஏரிகளில் சவுடு மணல் எடுக்க அனுமதி அளிப்பதற்கு கையூட்டு பெறுதல் போன்ற புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

?திடீரென நேற்று மாலை 4 மணிக்கு கனிமவளத்துறை அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் கதவுகளை தாழிட்டுக் கொண்டு 12 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்

?கனிமவளத்துறை உதவி இயக்குநர் சீனிவாசராவ் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு சீனிவாச ராவ் சரிவர பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மணல் குவாரி குறித்து பலருடன் சீனிவாச ராவ் பேசிய ஆடியோக்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை விவரங்களை அவரது செல்போனில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேகரித்திருப்பதாக தெரிகிறது. மேலும் முக்கிய ஆவணங்கள் மற்றும் மடிக்கணினி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?மேட்டூர் செய்தி …

?மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தம்

?டெல்டா பாசனத்திற்கான நீர்வரத்து குறைவால் மேட்டூர் அணையிலிருந்து 16 கண்மதகில் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. பாசனத்திற்காக அணை மற்றும் சுரங்க மின் வழியாக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சி ஆக இருக்கிறது.
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?காவேரி செய்தி ….

?திருச்சி முக்கொம்பு கொள்ளிடத்தில் தண்ணீர் நிறுத்தம்; பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

?மேட்டூரிலிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து 31,500 ஆயிரம் கனஅடியாக உள்ளது.முக்கொம்பு அணையிலிருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டு கல்லணைக்கு செல்கிறது. இதையாவதுகொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
காவிரியின் கிளை வாய்க்கால்களான புள்ளம்பாடி வாய்க்கால், அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களில் தலா 500 கன அடி வீதம் 1,500 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறதென பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?நேரலை செய்தி

?ஜம்மு – காஷ்மீரில் நிலம்; தங்கும் விடுதிகள்!’ – கர்நாடக அரசின் புதிய திட்டம்

?வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதனையடுத்து ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

?விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தபோது அப்போதைய மன்னர் ராஜா ஹரி சிங் வேண்டுக்கோளுக்கு இணங்க அரசியல் சாசனப் பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் அம்மாநில மக்கள் சில சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.

?காஷ்மீர் மக்களைத் தவிர நாட்டின் பிற மாநிலத்தவர் அங்கு சொத்துகள் வாங்க முடியாது

?மத்திய அரசு இயற்றும் சட்டங்கள் சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே மாநிலத்தில் செல்லுபடியாகும். ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் அங்கு நிலம் வாங்கலாம் என நிலை உருவானது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டரா அரசு ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

?இந்தநிலையில் தற்போது கர்நாடக அரசு ஜம்முவில் நிலம் வாங்கவுள்ளதாக அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சர் ரவி, “ஜம்மு – காஷ்மீரில் நிலம் வாங்குவது தொடர்பாக அமைச்சரைவில் முன்மொழிவை வைக்க இருக்கிறோம்.

?சட்டமன்றத்தில் அனுமதி கிடைத்ததும் மத்திய அரசு மற்றும் ஜம்மு – காஷ்மீர் ஆளுநருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்துவோம். ஒப்புதல் கிடைத்ததும் இரு யூனியன் பிரதேசங்களிலும் முதலீடு செய்வோம். சுற்றுலா விடுதிகள் அங்கு கட்டப்படும். இந்த முதலீட்டை கர்நாடக மாநில சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கவுள்ளோம்” என்றார்.

?ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்ய மற்ற மாநிலங்கள் ஆர்வம்காட்டாத நிலையில் பாஜக அரசு ஆட்சி புரியும் இரண்டு மாநில அரசுகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளன. கர்நாடகத்தில் சமீபத்தில்தான் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின்னர், எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க அரசு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
நடப்பு ஆண்டு முதல் 5 ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு (Public exam) நடத்தப்படும் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
[9/14, 10:34 AM] விண்மீண்நியூஸ்2: ?

திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் தர்மா கைது.!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் கோஷமிட்டதால் தர்மா கைது இதையடுத்து பேகம்பூர் பகுதியில் பதட்டத்தை தணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

advertisement by google

Related Articles

Back to top button