உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கும் வெள்ளை மாளிகை உயர்அதிகாரிகளுக்கும் இடையே கடுமையான சண்டை

advertisement by google

அமெரிக்க அதிபருக்கும் வெள்ளை மாளிகையில் இருக்கும் முக்கிய உயர் அதிகாரிகளுக்கும் இடையில் கடுமையான சண்டை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது

advertisement by google

தாலிபான்களால் அமெரிக்காவில் தற்போது பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தாலிபான் தலைவர்களை அமெரிக்கா வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டு இருந்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் போரை நிறுத்துவதற்காக அவர் இந்த முடிவை எடுத்தார். ஆனால் கடைசியில் இந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது. காபூல் குண்டு வெடிப்பு காரணமாக இந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது.வெள்ளை மாளிகைஇந்த நிலையில் தாலிபான்களை கேம்ப் டேவிட் பகுதிக்கு எப்படி டிரம்ப் அழைக்கலாம் என்று சண்டை நடந்து வருகிறது. வெள்ளை மாளிகையில் இதனால் பெரிய பிரச்சனை நிகழ்ந்து வருகின்றது. டிரம்பின் செயலாளர் மைக் பாம்பியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் டிரம்பிற்கு எதிராக பேசி இருக்கிறார்கள்.என்னஅதன்படி டிரம்ப் எடுத்த முடிவு தவறு. அமெரிக்க அரசால் கட்டப்பட்டு அமெரிக்காவின் நேவி படையால் இந்த கேம்ப் டேவிட் இடம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலோசனை கூட்டங்கள், அமைதி ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு நடந்து இருக்கிறது.தாலிபான் எப்படி தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கேம்ப் டேவிட் போன்ற இடத்திற்கு அழைத்து வருவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது, என்று டிரம்மிடம் இவர்கள் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள்.இதனால் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கேம்ப் டேவிட் போன்ற இடத்திற்கு அழைத்து வருவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது, என்று டிரம்மிடம் இவர்கள் வாக்குவாதம் செய்து இருக்கிறார்கள்.இதனால் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.சண்டைஇந்த நிலையில்தான் தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் அதிபர் டிரம்ப் மூலம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உங்களின் சேவை இனிமேல் வெள்ளை மாளிகைக்கு தேவை இல்லை என்று டிவிட்டரில் டிரம்ப், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குறித்து டிவிட் செய்தார்.நீக்கினார்அதன்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், நானே பதவி விலக முடிவு செய்துவிட்டேன் என்று டிவிட் செய்துள்ளார். இதையடுத்து நேற்று இரவு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து தலிபான்களால் தற்போது வெள்ளை மாளிகையில் சண்டை நடந்து வருகிறது.தாலிபான்கள்தாலிபான்களை கேம்ப் டேவிட் பகுதிக்கு அழைத்தது தப்பு. அதனால்தான் அதிகாரிகள் டிரம்ப் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் முடிவை துணை அதிபர் மைக் பென்ஸ் கூட எதிர்த்து இருக்கிறார். இதனால் அடுத்து வெள்ளை மாளிகையில் யாருக்கு வேலை போகும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இது நிர்வாக ரீதியாக டிரம்பிற்கும் நிறைய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button