இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

உலக நாடுகளுக்கு உதவ மாத்திரைகளை அனுப்பி வைத்த இந்தியாவிற்கு ,ஐ.நா. சபை நன்றி – விண்மீன் நியூஸ்

advertisement by google


கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ உலக நாடுகளுக்கு மாத்திரைகளை அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி: ஐ.நா. பொதுச்செயலாளர்

advertisement by google

கொரோனாவுக்கு எதிரான போரில் உதவ உலக நாடுகளுக்கு மாத்திரைகளை அனுப்பி வைத்த இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர்அன்டானியோ குட்டரஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

advertisement by google

சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

advertisement by google

உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

advertisement by google

மலேரியாவிற்கு எதிரான இந்த மருந்து கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்த உதவுகிறது.

advertisement by google

இந்தியா மிக அதிக அளவில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது.

advertisement by google

இதனால் இந்தியாவிடம் இருந்து பல்வேறு நாடுகள் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய கோரிக்கை வைத்து வருகிறது.

advertisement by google

அமெரிக்கா அதிபர் டிரம்பும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை கேட்டு வந்த நிலையில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து ஏற்றுமதி செய்து கொரோனா தடுப்புக்கு உதவியுள்ளது.

இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்டானியோ குட்டரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; கொரோனா போரில் ஒவ்வொரு நாடும் பிறநாடுகளுக்கு உதவ வேண்டும். அவ்வாறு உதவும் நாடுகளுக்கு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

advertisement by google

Related Articles

Back to top button