இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறு

தனி நபர் கடன் இ.எம்.ஐ.களை 3 மாதத்திற்கு ஒத்தி வையுங்கள் வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவிப்பு? அப்பாடா பொதுமக்கள் ? அதன் முழு விவரம் ?

advertisement by google

அப்பாடா.. தனி நபர் கடன் இ.எம்.ஐ.களை 3 மாதத்திற்கு ஒத்தி வையுங்கள்.. வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவிப்பு.

advertisement by google

மும்பை: அனைத்து வகை கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்கலாம் என்று வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி தள்ளி வெளியிட்டுள்ளது.

advertisement by google

கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏழை, எளியவர்கள் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ்களை அறிவித்தார். இது தவிர அந்தந்த மாநில அரசுகளும் ரேஷன் கடை வாயிலாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

advertisement by google

ஆனால், மத்தியதர வர்க்கத்திற்கு, சாதகமாக ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகாமல் இருந்தது. எனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்த்த உள்ளார் என்ற அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

மத்தியதர வர்க்கத்தினர் பலரும் இன்ஸ்டால்மென்ட் அதாவது இஎம்ஐ மூலமாக பொருட்களை வாங்கியுள்ளனர். இப்போது பணிக்கு செல்ல முடியாமல் விடுமுறையில் இருப்பதால் அவர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பது, கேள்விக்குறியாகியுள்ளது.

advertisement by google

இந்த நிலையில்தான், கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தனியார் துறை வங்கிகள் உட்பட வணிக வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தங்கள் டெபாசிட் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை. உங்கள் பணம் பாதுகாப்பாக உள்ளது. அனைத்து வகை தனி நபர் கடன்களின் ஈ.எம்.ஐ தவணைகளை 3 மாத காலம் ஒத்தி வைக்க பரிசீலிக்கலாம். இதை வராக்கடனாக கருதக்கூடாது. கடன் செலுத்தாததால் திவால் நடவடிக்கையை மேற்கொள்ளவும் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். அதாவது ஜூன் மாதம் வரை இ.எம்.ஐ கட்டுவதை ஒத்திப்போடலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கி கடனை திருப்பிச் செலுத்துவதில் நெருக்கடியை குறைப்பது, தாராளமாக கடன்கள் வழங்குவது உள்ளிட்ட 4 அம்சங்கள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளது

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button