இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

டிரம்ப்-மோடி பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்கத்தை விட்டு வெளியேறிய மக்கள்?

advertisement by google

டிரம்ப்- மோடி பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்தை விட்டு வெளியேறிய மக்கள்.

advertisement by google

அஹமதாபாத்: அஹமதாபாத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பேசிக்கொண்டிருக்கும் போதே அரங்கத்திலிருந்து மக்கள் வெளியேறி சென்றார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

உலகத் தலைவராக, உலகிற்கு நாட்டமை போல் நடந்து கொள்பவராக அறியப்படுபவர் அமெரிக்க அதிபர். இந்த பதவியில் யார் இருந்தாலும் அவர் தான் உலக நாடுகளை நாட்டமை செய்வார். அந்த வகையில் டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதில் இருந்து கொஞ்சம் அதிகமாகவே நாட்டமை செய்து வருகிறார்.
அவர் முதல்முறையாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏர்ஃபோர்ஸ் ஒன் என்ற தனி விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் இந்தியா வந்தார். அதிபா் டிரம்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னா் ஆகியோரும் வந்தார்கள் மேலும், டிரம்ப் நிா்வாகத்தைச் சோ்ந்த அமைச்சா்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் இந்தியா வந்துள்ளது.

advertisement by google

டிரம்ப் மற்றும் அவரது குழுவினருக்கு இந்திய அரசு மிகப்பெரிய வரவேற்பு அளித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேரை குஜராத்தின் அஹமதாபாத்தில் உள்ள மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குவித்து டிரம்பை வரவேற்றுள்ளது. அவரை வரவேற்கும் நிகழ்ச்சிக்கு வைக்கப்பட்ட பெயர் நமேஸ்தே டிரம்ப். இந்த நிகழ்ச்சயில் குவிந்த மக்கள் மத்தியில் அதிபர் டிரம்ப்பும, பிரதமர் மோடியும் உற்சாகத்துடன் உறையாற்றி கொண்டிருந்தார்கள்.

advertisement by google

டிரம்ப், பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுகையில், டீ வாலா வாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பிரதமர் மோடி. அவர் டீ விற்கும் பணி செய்தார். அனைவரும் அவரை நேசிக்கின்றனர். ஆனால் நான் சொல்கிறேன் அவர் மிகவும் கடினமானவர்” என்றார். அத்துடன் மோடியை நீங்கள் குஜராத்தின் பெருமை மட்டுமல்ல.. கடின உழைப்பால் இந்தியர்கள் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு வாழும் எடுத்துக்காட்டு நீங்கள் என்று பாராட்டினார்.
இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டி பேசிக்கொண்டிருந்த போதே அரங்கத்தை விட்டு ஏராளமான மக்கள் வெளியேறினர். ‘நமஸ்தே டிரம்ப் ‘ கூட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மக்கள் பங்கேற்ற நிலையில் பலரும் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button