இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

ஆதான் எண் அளித்தால் உடனே இ-பான் கார்டு – மத்தியரசு

advertisement by google

♦‘ஆதார்’ எண் அளித்தால் உடனே, ‘இ – பான் கார்டு’

advertisement by google

?மத்திய அரசு, ‘ஆதார்’ எண் மூலம், மிகச் சுலபமாக, வருமான வரி துறையின், ‘பான்’ எனப்படும் நிரந்தர கணக்கு எண் பெறும் திட்டத்தை, இம்மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது. இது குறித்து, மத்திய வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மின்னணு முறையில், வருமான வரி துறையின், பான் கார்டு வழங்கும் திட்டத்தின் கீழ், எவ்வித விண்ணப்ப படிவங்களையும் பூர்த்தி செய்யாமல், ஆதார் எண் மட்டும் அளித்து, ‘இ – பான்’ கார்டை பெறலாம்.

advertisement by google

?ஒருவர், வருமான வரி துறையின் வலைதளத்திற்குச் சென்று, ஆதார் எண் அளித்ததும், அவரின், ‘மொபைல்’ போனிற்கு, ஓ.டி.பி., எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் அனுப்பப்படும். இந்த எண்ணை மட்டும், வலைதளத்தில் பதிவு செய்தால் போதும். இதையடுத்து, ஆதார் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக, ‘இ – பான்’ எண் உள்ள அட்டை தோன்றும். அதை பதிவிறக்கி பயன்படுத்தலாம்.

advertisement by google

?இதன் மூலம், ஒருவர், பான் அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான அலைச்சல், செலவு ஆகியவை குறையும்.

advertisement by google

?இத்திட்ட பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிந்து விடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். ‘கெடு’ முடிகிறது மத்திய அரசு, ‘பான்’ கார்டுடன், ‘ஆதார்’ அடையாள எண் இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

advertisement by google

?இதற்கான, ‘கெடு’ வரும் மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதுவரை, 30.75 கோடி பேர், பான் கார்டு உடன், தங்களின் ஆதார் கார்டை இணைத்துள்ளனர்.

advertisement by google

?இருந்தும், இந்தாண்டு, ஜன., 27 நிலவரப்படி, 17.58 கோடி பேர், இன்னும் பான் அட்டையை, ஆதாருடன் இணைக்காமல் உள்ளனர். இத்தகையோர், சுலபமாக இணைய, புதிய திட்டம் உதவும்.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button