இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முஸ்லீம் மாப்பிள்ளை ஓகே சொன்ன பில்கேட்ஸ் மகள் வாழ்த்துகூறிய தந்தை பில்கேட்ஸ் சபாஷ்?

advertisement by google

சபாஷ்… முஸ்லிம் மாப்பிள்ளை.. ஓகே சொன்ன பில்கேட்ஸ் மகள்.. வாழ்த்து கூறிய தந்தை..!

advertisement by google

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில்கேட்ஸின் மகள் இஸ்லாமிய இளைஞரை காதல் திருமணம் செய்துகொள்ள போகிறார்.. இவர்களது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததற்கு பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

advertisement by google

கடின உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு.. இன்று உலக பணக்காரர்களின் ஒருவராக இருப்பவர் பில்கேட்ஸ்.. பல இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர்.. இவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்!!
இந்த தம்பதிக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்ற 2 மகள்களும், ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெனிபர் கேட்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் இது.. இவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த குதிரை பந்தய வீரர் நயல் நாசரை காதலிக்கிறார்.. இவர் ஒரு முஸ்லிம்.. 28 வயதாகிறது.

advertisement by google

ஒரு அழகான இடத்திற்கு ஜெனிபரை அழைத்து சென்று தன் காதலை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.. இந்த காதலுக்கு ஜெனிபரும் ஓகே சொல்லி விட்டார்… டேட்டிங்கின்போது, இருவரும் ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து கொண்டுள்ளனர்.. அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை ஜெனிபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

advertisement by google

அதில் “நயல் நாசர், நீங்கள் ரொம்பவும் தனித்துவமானவர்.. எனக்கு ஒரு வித்தியாசமானவர். கடந்த வார இறுதியில் என் கால்கள் தரையில் நிற்கவில்லை. நான் இப்போது மிகவும் புதியவள் போல உணர்கிறேன். நம்மால் பகிரப்பட்ட பலவித உணர்வுகளில் இது ஸ்பெஷலான ஒன்று.. இந்த இடம் அர்த்தமுள்ளதாக மாறி என்னை அளவுக்கு அதிகமாக ஆச்சரியப்படுத்தியது. நம் வாழ்நாள் முழுசும் கற்றுக் கொள்ளவும், வளரவும், சிரிக்கவும், ஒன்றாக நேசிக்கவும் என்னால் இனிமேலும் காத்திருக்க முடியவில்லை” என்று பதிவிட்டிருந்தார்..
ஜெனிபரின் இந்த வார்த்தைகளுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இதற்கிடையில் அந்த பதிவிற்கு அப்பா பில்கேட்ஸூம், அம்மா மெலிண்டாவும் தம்பதி சகிதமாக வந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.. “இந்த பதிவை கண்டு என் உடல் முழுவதும் சிலிர்ப்படைந்துவிட்டது… வாழ்த்துக்கள்…!” என பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார். மகள் நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்ததற்கு பில்கேட்ஸ் அளித்த பதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button