இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதி?அவரை வெளியேற்ற பாஜக முற்றுகை போராட்டம் பரபரப்பு ?

advertisement by google

நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்

advertisement by google

அவரை வெளியற்றக்கோரி பாஜகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

நெல்லையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில், இந்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அண்மையில் நடந்தது.

advertisement by google

இந்த மாநாட்டில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் ஹைதர்அலி, எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் முபாரக் உள்ளிட்டோருடன் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணனும் பங்கேற்றார்.

advertisement by google

அந்த கூட்டத்தில் பேசிய நெல்லை கண்ணன்

advertisement by google

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை கடுமையாகச் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது

advertisement by google

குறிப்பாக
உள்துறை அமைச்சர்அமித்ஷா குறித்து பேசுகையில்

advertisement by google

சோலியை முடிக்க வேண்டும் என்று பேசியதாக பரபரப்பு வீடியோ ஒன்று வைரலானது.

இதையடுத்து நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் போலீசில் புகார் அளித்தார்கள்

அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் நெல்லை கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

நெல்லை கண்ணனின் பேச்சு ஆட்சிக்கு எதிரான அறச் சீற்றம்-«

சீமான் இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை பாஜகவினர் தடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஆம்புலன்ஸை தடுத்த பாஜகவினரை போலீஸ் அப்புறப்படுத்தி வாகனத்திற்கு வழி ஏற்படுத்தினர்.இதையடுத்து பாஜகவினர் மருத்துவமனைக்கு சென்று முற்றுகையிட்டதோடு, நெல்லை கண்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

advertisement by google

Related Articles

Back to top button