இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

முப்படைகளை ஒருங்கினைக் க புதிய தலைமைதளபதியாக பிபின் ராவத் நியமணம் – மத்தியரசு அறிவிப்பு

advertisement by google

முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக மத்rதிய அரசு அறிவித்துள்ளது.

advertisement by google

ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கில், முப்படைத் தளபதி பதவி உருவாக்கப்படும் என சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

advertisement by google

இந்தப் பதவியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த செவ்வாய்க் கிழமை ஒப்புதல் அளித்தது

advertisement by google

இந்த நிலையில், நாட்டின் முதலாவது முப்படைத் தளபதியாக, ராணுவத் தளபதியாக உள்ள பிபின் ராவத் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து இன்று அவர் ஓய்வு பெற இருந்த நிலையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

advertisement by google

பாதுகாப்புத் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விவகாரங்கள் துறையின் தலைவராகச் செயல்படும் முப்படைத் தளபதி, நான்கு நட்சந்திர அந்தஸ்து பெற்ற ராணுவ ஜெனரலாக இருப்பார். ஓய்வு வயது 65 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுடன், அவரது ஊதியம், மூன்று படைகளின் தலைமைத் தளபதிகளுக்கு நிகராக இருக்கும்.

advertisement by google

ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படை தளபதிகளுக்கும் ஆலோசகராக தலைமைத் தளபதி செயல்படுவார். முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் சேவை விஷயங்களில் பாதுகாப்பு அமைச்சரின் முதன்மை ராணுவ ஆலோசகராக செயல்படுவார். ராணுவத் தளவாடங்கள் கொள்முதல், நாட்டின் பாதுகாப்பு அம்சங்களைத் திட்டமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வார். குறிப்பாக முப்படைகளின் தலைமையக விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கொண்டு சென்று உரிய முடிவுகளை எடுப்பதில் உறுதுணையாக செயல்படுவார்

advertisement by google

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் முப்படைத் தலைமைத் தளபதிகள் இருந்து வரும் நிலையில் இந்தியாவிலும் அப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது

advertisement by google

Related Articles

Back to top button